ELECTRICITY எலக்ரிசிட்டி
மூலம்: இவர்களது மன நிலை:-
அழுதுக் கொண்டேயிருத்தல், முட்டாள் தனம், பயந்தவர்களாகவே இருத்தல், கூச்சம், நரம்பு பலஹீனத்தால் கத்திக் கொண்டே பயந்து கொண்டே இருப்பார்கள், கவலையைப் பற்றியே புலம்பிக் கொண்டிருப்பார்கள். மின்னல் - இடி இடிக்கும் (காலத்தில்) போது பயம். வருத்தமாக இருக்கும். முக்கியமாக நெஞ்சுக்குள்ளே நரம்பு கோளாறு ஏற்படுதுன்னு சொல்வார்கள். (ELECTRICTAS - காரர்களுக்கு மின்னல், இடி, கரண்ட் உடம்பில் ஏறி தொல்லைகள் வரும். இடி, மின்னல், புயல் கேட்டாலும் அந்தக் காலத்திலும் பயம் ஏற்படும். இடி, புயலின் போது மனநிலை பித்து, பிடித்து விடும். வெறி பிடித்து விடுவார்கள். அப்போது எல்லா நோயும் வந்திடுச்சு என்பார்கள். மனோசக்தி எல்லாமே விழுந்திடும். மந்தமாகி விடுவார்கள். மின்னலுக்கு முன்பும், அப்போதும், உடலை (வதைப்பது) சித்ரவதை செய்வது போல் இருக்கும். ஞாபக சக்தியே கொஞ்சம் கூட இருக்காது. மனதை ஒரு நிலை படுத்தவே முடியாது. உணர்வே இருக்காது. தலையெல்லாம் ரொம்ப மந்தமாவே இருக்கும். திக்குனு விழுவார்கள். தலைச் சுற்றலும் காணப்படும். முக்கியமாக குனியும் போது தலைச்சுற்றலும், திக்குனு விழுதலும் காணப்படும்.
தலைவலி, நெற்றியில் அழுத்துவது போன்ற உணர்வும், இந்த வலியின் அழுத்தம் மேலேயும், கீழேயும் இறங்கும். கழுத்து, பின் கழுத்து, நெற்றி பகுதியில் கிழிப்பது போல் வலி. தலை நரம்புகள் கடுமையாக இழுத்துப் பிடித்து கடுமையான வலி ஏற்படும். பிடரிப் பகுதியில் இரணமாட்டம் வலி. பின் மண்டையில் எல்லாவிதமான தொல்லைகளும் இருக்கும். நடு தலையின் முன் பகுதியில் கர்ஜனை செய்வது போன்ற உணர்வு.
அதிகமான (ஒளி) வெளிச்சத்தைக் கொண்டு செய்யப்படும் சிசிச்சைக்கு, பிறகு ஏற்படும் தொல்லைகளுக்கு இது நல்ல மருந்து மற்றும் குறைவான மாதத்திலேயே பிறந்த குழந்தைகளை அதிகமான விளக்கு பொருத்தப்பட்ட. ஒளி உள்ள (இன்குலேட்டர்) கூடையில் வைத்த பிறகு ஏற்படும். தொல்லைகளுக்கு இது நல்ல மருந்து. பெண்களுக்கு அதிகமான போக்குச் சென்றதால் கர்பப்பை ஒரு மிருதுவான தன்மையை இழக்கும் போது மின் அதிரிச்சிக் கொடுப்பார்கள். (ELECTRIC BOX.) என்பார்கள். அதற்கும், மூளை சக்தியை அதிகரிக்க தலைக்கு ஷாக் கொடுத்த பிறகு ஏற்படும். அனைத்து தொல்லைகளுக்கும் இது பொருந்தும். மேலும் விளக்கம் தேவை என்றால் ; ALLEN KEY NOTES – ல் 315-ம் பக்கத்தில் பார்த்துக் கொள்ளவும். கண்ணை அதிகமாக பயன்படுத்தியப் பிறகு ஏற்படும். கண் எரிச்சலுக்கு நல்ல மருந்து.