CHLOROMYCETIN க்ளோரோமைசிட்டின்
ஆங்கில மருத்துவ முறையில் டைபாய்டு காய்ச்சல், விஷக் காய்ச்சல், பித்தவாத காய்ச்சல் (மூளைக் காய்ச்சல்) போன்றவற்றிக்கு இது மருந்து. (டைபாய்டு காய்ச்சல் என்பது குடல்களில் புண்களை ஏற்படுத்துவது, கழிவுகள் அதிக நாற்றத்துடன் காய்ச்சல் 21 நாட்களுக்கு இருக்கும்.) டைபாய்டு காய்ச்சல், மேலேக் கண்ட காய்ச்சலுக்கு ஹலோபதி மருத்துவ உலகில் இதுவே மிகப் பெரிய மருந்தாகும். இது போன்ற நோய்களில் இந்த மருந்தைப் பயன்படுத்தாத ஹலோபதி மருத்துவர்களே கிடையாது. எனவே நோயாளிகள் நம்மிடம் வந்து டைபாய்டு நோய்க்குப் பிறகு மேலும் அதிகத் தொல்லை என்றுக் கூறினால் அது குளோரோமைசிடினால் தான் தோன்றியவை என்பது நினைவுக்கு வர வேண்டும். அப்போது இதை ஹோமியோபதி மருந்தைத் தந்தால் முழுவதும் குணமாக்கலாம்.