CHENSHIRIC-CONTRORIC சென்ஸிரிக் கோன்ட்ராரிக்
மூலம்: தாழம்புவில் உள்ள சிறு நாகத்தின் விஷத்திலிருந்து வீரியபடுத்தப்பட்டவை . பிரேசில் நாட்டில் உள்ள தாழம்புவில் மட்டும் இம்மருந்து எடுக்கப்படுகிறது.
தீடீர் பயத்தால் மரணம் அடைந்து விடுவோமா என்ற எண்ணம். . ACON,ARN, ARS. மற்றும் இந்த மருந்தும் இருதய வியாதியில் தீடீர்ன்னு திக்குன்னு தோன்றும் மரண பயத்திற்க்கு ACON போல இந்த மருந்தும் வேலை செய்யும். படூக்கையை விட்டூ யாரோ துரத்துவது போன்ற உணர்வு ஏற்படூம். மற்றும் மனஅமைதியும் காணப்படூம். லேசாக நடந்தால சுகம். கனவிலும் இதயம் மற்ற இரத்தகுழாய்கள் வெடிப்பது போன்ற இருதய வியாதி பற்றியிருக்கும். இருதயம் (பெரிதாக) வீங்கி மார்பு முழுவதும் இருப்பது போன்றும், இருதயம் கட்டாகி வயிற்றில் இருப்பது போன்ற உணர்வுயிருக்கும். இதய துடிப்பானது இடது தோள்பட்டையில் கேட்கும். ARS மாதிரி மூச்சி திணறலும் மன அமைதியின்மையும் காணப்படும். ஆடையை தளர்த்தி விடூவார்கள் LACH மாதிரி ஆனால் LACH க்கு தண்ணி தாகமே இருக்காது, இந்த மருந்துகாரர்களுக்கு சிறிது அளவு தாகம் இருக்கும். இரவில் கண்ட கனவும் காலை வரை கூட நினைவில் இருக்கும். OP மாதிரி செக்ஸில் அதிக விருப்பம். மார்பு, இதயம் பெரிதாவது போலவும், கீழே இறங்குவது போலவும், வெடிப்பது போலவும் உணர்வுயிருக்கும் ARS. ARG-N, LACH சும் பொருந்தலாம். இதன் முக்கிய குறி மார்பு விரிந்து கொண்டே பெருத்துக் கொண்டே போகும்.
CHINA – OFFICINALIS – சைனா அ்பிசினாலிஸ்
கொய்னா மரப்பட்டையின் சாறு.
குளிர் காய்ச்சலின் போது தொல்லை வரும். என தெரிந்தே பச்ச தண்ணி சாப்பிட்டேன் என்றாலும், குளிர் காய்ச்சலின் போது சுடுநீர் விருப்பம் இல்லாமல் சாப்பிடுகிறேன் என்றால் நிமிடம் தவறாமல் ஒரே நேரத்தில் தாக்கினால் CEDRON. சுடுநீரை விரும்பி சாப்பிட்டால் ARS. ஐஸ் வாட்டர் குடித்தால் சுகம் என்றால் PHOS. அசைவு கொடுத்தால் வயிறு வலி தணிவு என்றாலும் CHINA தான் மருந்து. குளிர் காய்ச்சலின் போதும், மற்ற வகை காய்ச்சலின் போதும், சரும நோயோ, வலிப்பு வகைகளோ, வேறு எந்த வகை தொல்லையாக இருந்தாலும், முறை வைத்து அதாவது அமாவாசை, பாட்டிம்மை, பௌணர்மி, வெய்யில் காலம், மழை காலம் என்று குறிப்பிட்ட காலத்தில் தோன்றும் முறை குணத்திற்கு இது முக்கிய மருந்து. மற்றும் குளிரின் போது பச்ச தண்ணீரை தான் குடிப்பார். குளிர் காய்ச்சலின் போதும், இரவு நேரத்திலும் போர்த்த மாட்டார். குளிக்கும் போது எனக்கு காய்ச்சல் வர போகுது என்று சொல்லி கொண்டே குளிப்பார். நான் அவதிபட போகிறேன், அவஸ்தை பட போகிறேன் என்று சொல்லி கொண்டே தப்பு செய்வார். உதடும், முகமும் சிவப்பு நிறமாக இருக்கும், காய்ச்சலின் போது வியர்வை இருக்கும். போர்வையை எடுக்க மாட்டமார். இது விசேஷமான குறி. இதே இடத்தில் சுடுநீர் குடித்தால் ARS. (அல்சரின் போது கஞ்சி குடித்தால் வயிறு வலிக்குது, ரொட்டி, கறி போன்ற கெட்டியான பொருளை தின்றால் சுகம் என்றால் IGN. காமாலையும் மலேரியாவும் கலந்த ஒரு நிலை. மாத விலக்கு அதிகமாக சென்று பால் அதிகமாக குழந்தைக்கு கொடுத்தது, விந்து சக்தி அதிகம், வெள்ளைபாடு அதிகம், இப்படி (உயிர் சக்தி) அதிகம் போன பிறகு மனம் மந்தமும், சோம்பலும், நீடித்த கவலையும், கலைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு நாள் பசிக்கும். மறுநாள் பசிக்காது. ஒரு நாள் காய்ச்சல, மறு நாள் காய்ச்சல் இருக்காது, இப்படி அடுத்த, நாள் முறை வைத்து வரும் தொல்லைகளுக்கு, நோய்களுக்கு இது தான் மருந்து.