CHAMOMILLA சாமோமில்லர்
மூலம்: ஜெர்மனியில் விளைகின்ற ஒரு வகை தாவரம்.
வலிக்கு பிறகு கோபம் வந்தாலும், கவலை மற்ற நோயின் போது கோபப்பட்டாலும், கோபத்தின் போது எதையும் தாங்க மாட்டார். இதனால் எதையும் நம்ப மாட்டார். உடன் எப்பவும் கோபமாக இருப்பார். பல் முளைக்கும் போது கோபப்பட்டால் இது. அப்பொழுது முரட்டுதனம். கழிவுகள், புளிப்பு வாடையுடன் வந்தால் RHEUM. கோபம் வந்தால் தலைவலியும் வந்து விடும் BRY, LYC, NUX-V, N-M, PETR, PHOS, PLAT, STAPH.வாசனை இருந்தால் தூக்கம் வராது. ஒரு கன்னம் சிவப்பும், சூடும், ஒரு கன்னம் வெளுத்தும், குளிர்ந்தும் இருக்கும். தாடை இருக்கி பிடித்த மாதிரி பல் வலியும், சுடுநீரோ, காப்பி போன்ற பானம் குடித்த பின்பும், இரவிலும் பல் வலி ஏற்படும். கோபப்பட்டு, கோபப்பட்டு குழந்தைக்கு முக தசை தொங்கி போய் விடும். பெண் பிரசவ வலியின் போது முக்கினால் கருப்பு நிறத்தில் கட்டி கட்டியாக தீட்டு மாதிரி கொட்டும். அப்ப பிரசவ வலியானது மேலே போய்விடும் GELS. சித்தரவதை செய்யற மாதிரி இருக்குது என்று உடன் கோபத்துடன் சொன்னால் CAUL, CAUS, GELS, HYOS. PULS. தாயின் மார்பு காம்பு வீங்கி புண்ணாகியிருக்கும், துணி கூட பட முடியாது. குழந்தையின் மார்பு காம்பும் இப்படியே இருக்கும். இதனால் கோபமாகவே இருப்பார். இவர்களுக்கு மஞ்சள் நிறமான வெள்ளைபாடு, அது பட்டயிடத்தில் புண்ணாகும் படியான காரமான வெள்ளைபாடு படும். குறிப்பு:- சந்தேகத்துடன் எதையும் நம்பா விட்டால் இங்கு HYOS, LACH வரும். கோபத்தினால் நம்ப மாட்டார். உடன் கோபத்தின் போது சிரிக்கவும், ரசிக்கவும், சிந்திக்கவும், தாங்கவும், பொருத்துக்கவும் முடியாமல் உம்முன்னு முகத்தை வைத்திருக்கும் குழந்தைகளுக்கும், இப்படி எதையும் செய்யமாட்டார். என்றால் இது தான் மருந்து. மண்ணீரல் தொல்லைக்கு நல்ல மருந்து. பார்த்துக் கொள்ளவும்;.
CHELIDONIUM – MAJUS – செலிடோனியம் மாஜஸ்
ஒரு வகை அமெரிக்காவில் உள்ள மஞ்சள் நிற தாவரம்.
இம் மருந்து மஞ்ச காமாலையின் போது மிகவும் பயன்படும். வலது புற மார்பு எலும்பின் உள்புறம் (ஈரல்) பகுதி, முன்புறமும், அதே நேருக்கு பின்புறமும் ஏதோ முட்டிக்கொண்டு (அ) ஈரல் முட்டிக்கொண்டு வலிக்குது என்பார். கொதிக்க, கொதிக்க சுடுநீர், டீ, காபி போன்றவற்றை டம்ளரில் துணியை பிடித்துக்கொண்டு குடிப்பார். இதே ARSகாரர் சூடாக குடிப்பார். முகம் கண், நாக்கு, மலம், சிறுநீர், கண்ணீர், எச்சில், வெள்ளைபாடு எல்லாமே மஞ்சள் நிறைந்த தங்க கலராகவேயிருக்கும். இதனால் தன் கடமை விட்டு போச்சே, மறந்து விட்டேன் என்பார். இவருக்கு ஈரல் வலியானது விலா எலுமபில் 4 லிருந்து 9 வது விலா எலும்பு முன்புறமும், பின்புறமும் வலி தோன்றும். முன்புறம் வளைந்தால் வயிற்று வலி தணிவு COCC, VERAT-ALB, VERAT-V ஏப்பம் விட்டால் வயிறு வலி சரியாகி விடும். B-C, BRY, COCC, CALC, CARB-V, LYC, DIOS-C, GRAPH. மாலை 4 மணி முதல் 8 மணி வரை வயிறு வலி வந்தால் LYC. வரும். இல்லை என்றால் மற்ற குறிகளை பார்த்து CHEL (OR) LYC என்று தேர்வு செய்ய வேண்டும். நாக்கு, கண், சிறுநீர் தங்கம், மாதிரி மின்னும்.