CEDRON செட்ரோன்

மூலம்: சாரை பாம்பின் விதை பகுதியை எடுத்து மருந்தாக செய்யப்பட்டது.

பூச்சிகடிகளுக்கு நல்ல மருந்து. உடல் உறவுக்கு பிறகு உடல் வறட்சிக்கு நல்ல மருந்து. இவர்கள் நண்பர்களை கண்டு பயப்படுவார்கள. வெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு தலைவலி. மாத விலக்கிற்கு முன்பும், பின்பும் வெள்ளைபாடு. மாலை கருக்கலில் பயம். எப்போதும் பயம் ARS. படுக்கையில் பயம் என்றால் ARS, AGAR, CALC. எல்லா கஷ்டங்களும், நோய்களும், முறை வைத்து வருடம், மாதம், பருவம், நாள், மணி, என்று முறை குணத்திற்கு CHINA. அதை விட இதுவே முறை குணத்திற்கு பெரிய மருந்து. சொல்வார்கள் எனக்கு தலைவலி, காய்ச்சல், வயிறுவலி, சொரி, சிரங்கு, காமாலை, டைபாயிடு, மலேரியா, நிமோனியா இது போன்ற நோய் கஷ்டங்களை சொல்லி பருவ காலம், இரவு, பகல் என்று குறிப்பிட்ட நிமிஷத்தில் ஒரு நிமிஷமோ, சில வினாடிகளோ தவறாமல், புள்ளிப் போட்ட மாதிரி, குண்டு போட்ட மாதிரி என்று குறிப்பிட்ட நேரத்தில் வருது என்று சொன்னால் இது ஒன்று தான் மருந்து. உடன் CHINAவையும் பார்த்து கொள்ள வேண்டும். மாதவிலக்குக்கு முன் வெள்ளைபடுதல். கறுப்பு பார்த்தால் பயம் STARM. மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமேனு பயம். பக்கவாதம் வருமோனு பயம் CAL-F, CALEND., SAMBU. கண் முன்பு நெருப்பு எரியற மாதிரியென்றால் CAPS. ஏதோ நமக்கு அழிவு வரப்போகுதுனு பயம் ஏற்பட்டால் இது தான் மருந்து.