CARBO-VEGTABILIS கார்போ வெஜிடாபிலிஸ்

மூலம்: காய்கறிகளை சுட்ட கறி.

மூச்சுத் திணறல் ஏற்படும் போது உதடு நீலம் பூத்து இருத்தல், இது காலராவின் போது மூச்சு திணறல் ஏற்படும். திணறல் குறைவாக இருந்தாலும் பிராணவாயு உடலுக்கு சேராமல் உதடு மற்ற முகப்பகுதிகள் நீலம் பூரித்து விடும். உடம்பு ஜில்லிட்டு போய் விடும். உடன் CAMPH, VERAT. வாயு பண்டம் சாப்பிட்டு வயிறு இழுத்து பிடித்தால் இது. இரத்தத்தில் பிராண வாயு சேராத நிலையினால் தான் இப்படி நீலம் பூத்து விடுகிறது. உதடு கன்னத்திலும் உள்ளங்கை நகத்திலும், தெளிவாக தெரியும். வியர்வை இருக்கும். இவர்களுக்கு எவ்வளவு காற்று இருந்தாலும் பத்தாது, காற்றுப் பசிக்காரர்கள். கெட்டுப்போன உணவைத்தின்று வயிறு உப்பிசம் மற்றும் அழுகி போன பழஙகள், சொத்தையான காய்கறிகள், ஊசி போன உணவுப் பொருட்கள் சாப்பிட்டு வயிறு கெட்டு உப்பிசம் ஏற்பட்டால் இது தான் மருந்து, அதாவது அடிதடி காயம், நீண்ட நாள் நோயில் படுத்திருப்பது, டைபாயிடு, மலேரியா, பாம்பு, தேள் போன் கடிகள், தீடீர்ன்னு தோன்ற கூடிய எந்த வகை நிலையாக இருந்தாலும், பிராண வாயு இரத்தத்தில் சேராமல் விரைவில் மரணம் ஏற்படும். இந்நிலையில உதடு, கைவிரல் நகத்தில், கன்னத்தில் நீலம் தெளிவாக தெரியும். இதை கொடுத்தால் மரணத்திலிருந்து மீட்கலாம். மூச்சு திணறி மரணம் ஏற்படும் அதை தடுக்கலாம்.