CALADIUM - SEGUINUM காலாடியம் ஸோக்னியம்
மூலம்: அமெரிக்காவில் விளையும் ஒரு வித கஞ்சா செடி -(போதை தரும் தாவம்).
இந்த மருந்துக்காரர்கள் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்;ணம் இருக்கும். புகையிலையில் செய்யப்பட்ட சுருட்டு, சிகரெட், பீடி போன்றவற்றை குடித்து கொண்டே இருக்க விருப்பம். எப்போது பார்த்தாலும், ஓயாமல் குடித்துக் கொண்டே இருப்பார். அதனால் இவருக்கு கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளின் எல்லா பகுதிகளும் தொல்லைகளும், நோய்களும் இருக்கும், புகையிலை, புகை விஷம் பரவியதை முறிக்கவும், குணப்படுத்தவும், விருப்பத்தை நிறுத்தவும் இம் மருந்து பயன்படும். மானி தளர்ந்தும், பெருத்தும், ஜில்லிட்டும் காணப்படும். இல்லறத்தில் ஈடுபட இயலாது. பெண் யோனி தடித்து இருப்பதால் தேய்த்துக் கொண்டேயிருக்க விருப்பம். இவர்களுக்கு ஏற்படும் வியர்வை இனிப்பு சுவையுள்ள வியர்வை. அது ஈ முய்க்கும் அளவுக்கு இனிப்பு வியர்வை. (சர்க்கரை வியாதிகாரர்களின் சிறுநீரில் தான் ஈ மொய்க்கும்.) ஆனால் இவர்களுக்கு வியர்வையிலே ஈ மொய்க்கும். அந்த அளவு, இனிப்பு வியர்வை. மானி பெருத்து, வீங்கி, சிவந்து இருந்தாலும் எழுச்சியிருக்காது. அதனால் ஈடுபட இயலாது. பெண் உதடுகளை கர்ப்ப காலத்தில் தேய்த்துக் கொண்டேயிருந்தால் AMBR, KREOS. உணர்வுகளை சிறிது நேரம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் HYTR.