CACTUS-GRANDIFLORUS காக்டஸ் க்ராண்டிப்ளோரஸ்

மூலம்: இலவ மர சிவப்பு பூ (பஞ்சு).

இந்த மருந்துக்காரர்கள் தன் வியாதி குணமாகுமா (அ) ஆகாதா, இதனால் நாம் இறந்து விடுவோமா என்ற பயம். இரும்பு வளைக்குள் இதயத்தை வெச்சி நசுக்குவது போன்ற வலி, மற்ற உடல் உறுப்புகளிலும் இதே போல் நசுக்குவது போன்ற வலி இருந்தால் இதை பார்க்கவும். இரும்பு கை கொண்டு அப்படியே நசுக்கிற மாதிரி வலிங்க என்றால் இது தான் மருந்து. இது சில சமயம் கருப்பை, ஈரல், குடல் என்று எந்த ஒரு உள் உறுப்பிலும் கையில் நாம்பி வெச்சி பிசையர மாதிரி வலி என்றாலும், வலைக்குள்ளே வெச்சி நசுக்கிற மாதிரி வலி என்றால் இது தான் மருந்து, இவர்களுக்கு மலமானது கெட்டியாகவும், கருப்பாகவும் வரும். அதிகாலையில் இவர்களுக்கு பேதி தோன்றும். அப்போது கூட ஆஸன வாய் பெருத்து கடுமையான வலியிருக்கும். இவர்களுக்கு ஓர் உணர்ச்சி, ஆஸன வாய் பெருத்து பந்தாட்டம் கனமா இருக்குதுங்க என்பார். மலேரியா காய்ச்சல், இருதய நோயில் முடியும். மூல வியாதியும், இருதய நோயில் போய் முடியும்.