ASAFOETIDA அஸபோடியர்
மூலம்: பெருங்காயம்.
இம் மருந்துகாரர்கள் கற்பனைக்காரர். பக்கத்தில் இருப்பவர்கள் நமக்கு தீங்கு செய்கிறார்கள் என்று கற்பனையாக எண்ணி சண்டைக்கு போவதும், புறம் சொல்வதும் அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தால் அவர்கள் நமக்கு நல்லது செய்கிறார்கள் என்று கற்பனையாக நினைத்துக்கொண்டு உதவி செய்ய போவார்கள். கற்பனையாக பயப்படுவதும், கவலைப்படுவதும், நமக்கு நல்லது செய்து இருப்பார்கள் என்று தூக்கி வைத்து பேசுவதும். பக்கவாதம் வந்திடுமோ, இருதய நோய் வந்திடுமோ என்று கற்பனையாக நினைப்பார்கள். இறுதியில் கிறு, கிறுப்பில் முடியும். ஏதாவது காரணத்தைச் சொல்லி எனக்கு கிறு, கிறுப்பில் பேச முடியாது என்றாலும், யாராவது பேசினால் இவர்கள் தான் பேசுவார்கள். அவர்களை இவர்கள் பேச விடமாட்டார்கள். ஆனாலும் இவர்கள் பேசி, பேசியே கிறு, கிறுப்பில் (மயக்கத்தில்) போய் முடிந்து விடும். பிறரைப் பற்றியே குறை சொல்லி, சொல்லி, ஓயாது பேசி, பேசி மயக்கத்தில் முடியும், அரை பைத்தியம் ஆகி விடுவார்கள். இதயத்தில் ஏற்படும் தொல்லைகளுக்கும், இதுவே மருந்து. குறிப்பாக அடி வயிற்றைப் பற்றியே கூறுவார்கள். மலக் காற்றினால் வயிறு உப்பி விடும். வயிறு இழுத்து பிடித்துக் கொள்ளும். நீண்டு விடும். அப்படியும் காற்றுப் பிரிந்தால் தாங்க முடியாத நாற்றம் வீசும். இப்படி மலக்காற்றைப் பற்றியே பேசி, பேசி அரைப் பைத்தியம் ஆகிவிடுவார்கள். வயிறு வெடித்து போகிற மாதிரி, ஓடற மாதிரி, காற்று மாதிரி, கெட்டியாக இருக்கிற மாதிரி, மேல் வயிறு தண்ணில மிதக்கிற மாதிரி, மலக்காற்று மற்றும் வாய் ஊசி போன நாற்றம் அடிக்கும். தண்ணியாட்டம் பேதி, வயிறு இழுத்து பிடிக்குது, கண்ணை கட்டுகிறது. அப்போது கவலையாக, ஏக்கமாக, கஷ்டமாக இருக்கும். பாதரசம் சாப்பிட்ட பிறகு தாங்க இப்படி தொல்லை என்பார்கள் எலும்பு சொத்தை ஆகி விட்டதுங்க என்பார்கள்.
ASARUM – EUROPAEUM - அஸரம் ஐரோப்பியம்
ஐரோப்பா விஷ மர வேர்.
இம்மருந்துக்காரர்கள் மிக, மிக உணர்ச்சி மிக்கவர்கள் . எல்லாவற்றையும் விட மிக, மிக உணர்ச்சிகாரர்கள், மிதப்பது போலவும், பறப்பது போலவும், காற்று போலவும், ஒளி தேகம் ஆகி விட்டது என்றும், வள்ளலார் மாதிரியும்; கூறுவார்கள். வள்ளலார் மாதிரி பிறர்க்கு வழிகாட்டுவார்கள். எந்த நோயிலும் இவர்களுக்கு இந்த குறி காணப்பட்டால் இது தான் மருந்து. ஆனால் ஞானிகளுக்கும் பொருந்துமா? என்பது சிந்தனைக்குரியது. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பார்கள், போதையில் இருப்பவர் மாதிரியும், மந்தமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் பேப்பரை கசக்குவது, துணி உரசும் சத்தம் கேட்டால் கூட தாங்க முடியாது. அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள். வெளிச்சத்திற்கு இந்த மருந்து. இருட்டு, வெற்றிடம் போன்றவற்றில் இருக்க விரும்பினால் ARG - N. மகரிஷிகள், வேதாத்திரி போன்ற ஞானிகளுக்கு பொருந்துமா? என்பது சிந்தனைக்குரியது. சத்தம் தாங்க மாட்டார் ACID - NITE. கண் மட்டும் இருட்டு என்றால் ARG – N. கர்ப காலத்தில் குமட்டி வாந்தி வந்தால், கண் ஆப்ரேஷனுக்கு பிறகு இருட்டு கட்டினால் இது. குடி, போதை மிக விருப்பம். ஹோமியோபதியில் சென்ஸிட்டிவ்க்கு 17 மருந்துகள் உள்ளது. அதில் இதுவும் ஒன்று. புகை மீது விருப்பம். கொட்டாவி விட்டு கொண்டே இருப்பார்.