ARUM TRIPELE அவுரம் ட்ரிபெலி

மூலம்: மஞ்சள்.

இம் மருந்துகாரர்கள் மச மசன்னு மந்தமா, கேனம் பிடித்த மாதிரி இருப்பார்கள். எதையும் யாரையும் கண்டுக்காமல் நகத்தை கடித்துக் கொண்டும், தோலை உறித்துக் கொண்டும், உதடு காய்ந்தும் இருக்கும். அதனால் உதட்டு தோலை உறித்து கொண்டும். அடிக்கடி நாக்கினால் எச்சி தடவி கொண்டும் இருப்பார்கள். இதே போல ஆவேசமாகவும், வேகமாகவும் பேசி, பேசி, தொண்டை கம்மி விடும். நம்மிடம் வந்து ஆசிரியர்களோ, ஏலக்கடைக்காரர்களோ, மேடை பேச்சாளர்களோ, மத பாதிரியார்களோ வந்து தொண்டை கம்மி விட்டது என்றால் இது தான் மருந்து. அதனுடன் மற்றதும் போய்விடும். மலேரியா, டைப்பாயிடு, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான நோயில் மனம் மந்தமாகி கேனமாட்டம் படுத்தப் படுக்கையாக இருக்கும் போது உதடு வெடித்து உலர்ந்து இருக்கும் போது, நாக்கால் உதட்டை எச்சில் தடவி, தடவி ஈரப்படுத்துவதும், உதட்டு தோலை ஆரஞ்சுப் பழ உள் தோலை உறிப்பது போல் உறிப்பதும் இதன் முக்கிய குறி. கத்தி, கத்தி பேசுவதும் முக்கிய குறியாகும். கல்யாண வீட்டில், எலவு வீட்டில், கத்தி, கத்தி பேசி தொண்டை மங்கி விட்டால் ஒரே மருந்து இது தான்.