ANTIMONIUM – TART ஆண்டிமோனியம் டார்ட்

நீலக் கல்லும், பழக்கூழும்.

ஆஸ்துமாவுக்கு இது முக்கிய மருந்து. நுரையீரல்களில் உள்ள காற்று அறைகளில் காற்றுக்கு பதிலாக சளி நிரம்பியிருக்கும். அதனால் சுவாசம் தடைப்பட்டு கர், கர்ன்னு சத்தம். கொய்கொய்ன்னு சத்தம் கேட்கும், சளி அங்கு அப்பி கொண்டு இருக்குதுங்க, மூச்சு கெஸ், கெஸ்ன்னு எளப்பு மாதிரி எடுக்கிறது என்பார். நெஞ்சை நிமிர்த்து கொண்டு சுவாசிப்பார். இதை ஏங்கல் நோய் என்பார். தொண்டையில் சளி கெட்டியாக அப்பி கொண்டு இருப்பதால் கரட்டு, கரட்டுன்னு சளி சத்தம் கேட்கும். பொதுவாக இவர்களுக்கு சளி கெட்டியாக உறைந்து விடுவதால் தொண்டையில் சளி அப்பிக் கொண்டு இருக்குதுங்க, காரினாலும் வரமாட்டிங்குதுங்க, இரும்பினாலும் வரமாட்டிங்குதுங்க, எனக்கு நிமோனியா நோயுங்க, ஆஸ்துமா நோயுங்க என்று பல புகார்களை சொல்லி, சளி அப்பிக் கொண்டது என்றால் இது தான் ஒரே மருந்து. வயதானவர்களுக்கு மரணக்கட்டதின் போது கிராமத்தில் சேத்துமாம் கட்டிக்கிச்சி, இனி பிழைக்காது என்பார்கள். அதற்கு காரணம் சளி கெட்டியாகி சுவாசத்தை தடை செய்யவது தான். அப்போது இதை கொடுத்ததால் சளியை இளக்கி கரைத்து தண்ணியாட்டம் ஊற்றி போய்விடும். பிறகு ஏது நோய். சேத்துமாம், ஆஸ்துமா, நிமோனியா, புளுரஷி என்ற பெயர்கள் எல்லாம் எதற்க்கு இப்போது, பெயர் தேவையில்லை அல்லவா. குறிப்பு:- ஆகவே தான் டாக்டர் சாமுவேல் ஹானிமேன் அவர்கள் நோயின் பெயர்கள் எல்லாம் கற்பனை, லேப் டெஸ்ட்டு என்பது எல்லாம் பித்தலாட்டம், அதை பார்த்து மருந்து தருகிறேன் என்பது ஏமாற்று வேலை என்கிறார்.