ANTHRACINUM ஆந்ராக்சினம்
மூலம்: ஆந்ராக்சின் தொற்று விஷ கிருமிகளிலிருந்து அரைத்து செய்யப்படும்.
கால்நடைகளுக்கு ஏற்படும் சீல் புண்கள், இராஜப்பிளவை, எரிச்சல்களுக்கு ARS, SIL. இதை கொடுத்து குணமாகவில்லை என்றால் இதுதான் மருந்து. கால்நடைகளுக்கு இரண்டு இஞ்சி அளவு புண், சொத்தை, அழுகல், உடன் பயங்கரமான எரிச்சலோடு கருப்பு நிறமான இரத்தம் வடியும். ஆழமான பிளவைக்கும், பெரிய எரிச்சலுக்கும் இதுதான் மருந்து . எரிச்சல் தாங்க முடியாமல் இறந்து விடுவோம் என்ற பயமும், இந்த எரிச்சலுக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றும். மனிதர்களுக்கு பெரும்பாலும் முதுகு பகுதியில் ஒரு பெரிய இட்லி அளவு கட்டி தோன்றும். பின்பு அது பிளந்து இம்மருந்தின் அடையாளங்களை தோற்றுவிக்கும். தற்காலத்தில் (2002, 2003) அமெரிக்காவில் தொற்று நோயாக இந்த ஆந்தராக்ஸ் என்ற கிருமி தோன்றி இது போல பலரைக்கொன்றுவிட்டது. ஆகவே அப்போது இந்த நோயுள்ளவர்களுக்கு மருந்தாகவும், நோயில்லாதவர்களுக்கு தடுப்பு மருந்தாகவும் கொடுத்திருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று எண்ணி பார்ப்போம். நிணநீர் கோளங்களில் கூட இப்படி ஏற்படும்.
குறிப்பு
இந்த மருந்தின் குணம் பயங்கரமாக கடிக்க விருப்பம். எரிச்சல் தாங்க முடியாமல் கதறுவார்கள். அதனால் தான் அமெரிக்காவே இதைக் கண்டு கலங்கி விட்டது. இது புற்று நோய், எய்ட்ஸ் நோய், சர்க்கரை நோய், அடிதடி காயங்களுக்கு பிறகு இப்படி குறி தோன்றினால் இது தான் மருந்து. மாதேஸ்வரன் மலையில் வாழந்த சித்தர் ஒரு மன்னனின் முதுகு பிளவறைக்கு இது தேவைப்பட்டிருக்குமா? (அ) பைரோஜினயம் என்ற மருந்து தேவைப்பட்டிருக்குமா? எப்படியோ மன்னனை குணப்படுத்தியதால் அந்த மருத்துவரை இறைவன் என்று வணங்கினார்கள். மகரிஷி அனைவரையும் இறைவன் என்கிறார்.
ANT – CRUDUM – ஆன்ட் க்ருடம்
கருப்பு கந்தகமும், நீலக் கல்லும் கலந்த கலவை.
மிக, மிக உணர்ச்சி மிக்க, அதிக கோபம் உள்ள முதல் மருந்து இதுவே. குழந்தைகளிடம் இது வெளிப்படையாக காணப்படும். தாய் இடுப்பில் இருக்கும் குழந்தையை நாம் உற்றுப் பார்த்தாலே உறும்பும், கத்தும் (அ) அழும். (அ) கோபத்தினால் தலை குனிந்து கொள்ளும். கால் ஆனி, நாக்கில் தடித்த, வெள்ளை நிறமான படிவும், பால் ஆடை மாதிரி படிவும் காணப்படும், (நாக்கு மினு, மினுன்னு இருந்தால் ARS.) காதல் நோய் மருந்து TRILLUM. விவாகரத்து செய்து பின்பும் அவரையே விரும்பினால், நினைத்துக் கொண்டிருந்தால் (கற்பனை காதல்) STRAM. தாழ்ந்தவனை விரும்பினால் N-M. இலட்சிய மனைவி வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு இது. நடு வயதில் எல்லாமே எதிராக மாறிவிடும். தண்ணீரில் விழுந்து சாவேன். கொழுப்பு, புளிப்பு, விருப்பம். மற்றும் தொல்லை. 5 நாள் பேதியும் கட்டி கட்டியாக போகும். அடுத்தது ஐந்து நாள் மலச்சிக்கல், மூட்டு வலியும் மாறி, மாறி வரும், (அடுத்த மறு நாளே இப்படி மாறினால் PULS.) நாக்கு தடித்து வெண்மையாக இருந்தால் இந்த மருந்து. நாக்கு மினு, மினுன்னு இருந்தால் ARS. கை, கால்களில் ஆணி அறுத்து கொண்டே இருப்பார்கள். குளிர்ச்சியும், வெய்யிலும், புளிப்பும் இவர்களுக்கு ஒத்துக்காது. (தான் தான் உயர்வு என்றால் PLAT.) முரட்டுதனம், முட்டாள் தனம், கர்வமான எண்ணம். சிடு சிடுப்பும், கோபமும், குளிர் வெப்பமும் தொல்லை.
குறிப்பு
காவல் நாயின் கண்களை உற்று பார்த்தால் உறும்புவது தெரியும். அதுக்கு இது தரலாம். கடுமையான வெயிலில், ஆற்றில் குளித்தேன் தலைவலி வந்து விட்டது. SEX முரட்டுதனமாக இவரை தொட்டால் பிடிக்காது. அதிக சூடு, குளிர்ச்சி பிடிக்காது. தண்ணீர் கேட்டால் தாமதமாக கொண்டு வருவார். அப்பா என்ன செத்தா போகிறார் என்பார். ஒரு தலை காதல்.
ANTIMONIUM – TART - ஆண்டிமோனியம் டார்ட்
நீலக் கல்லும், பழக்கூழும்.
ஆஸ்துமாவுக்கு இது முக்கிய மருந்து. நுரையீரல்களில் உள்ள காற்று அறைகளில் காற்றுக்கு பதிலாக சளி நிரம்பியிருக்கும். அதனால் சுவாசம் தடைப்பட்டு கர், கர்ன்னு சத்தம். கொய்கொய்ன்னு சத்தம் கேட்கும், சளி அங்கு அப்பி கொண்டு இருக்குதுங்க, மூச்சு கெஸ், கெஸ்ன்னு எளப்பு மாதிரி எடுக்கிறது என்பார். நெஞ்சை நிமிர்த்து கொண்டு சுவாசிப்பார். இதை ஏங்கல் நோய் என்பார். தொண்டையில் சளி கெட்டியாக அப்பி கொண்டு இருப்பதால் கரட்டு, கரட்டுன்னு சளி சத்தம் கேட்கும். பொதுவாக இவர்களுக்கு சளி கெட்டியாக உறைந்து விடுவதால் தொண்டையில் சளி அப்பிக் கொண்டு இருக்குதுங்க, காரினாலும் வரமாட்டிங்குதுங்க, இரும்பினாலும் வரமாட்டிங்குதுங்க, எனக்கு நிமோனியா நோயுங்க, ஆஸ்துமா நோயுங்க என்று பல புகார்களை சொல்லி, சளி அப்பிக் கொண்டது என்றால் இது தான் ஒரே மருந்து. வயதானவர்களுக்கு மரணக்கட்டதின் போது கிராமத்தில் சேத்துமாம் கட்டிக்கிச்சி, இனி பிழைக்காது என்பார்கள். அதற்கு காரணம் சளி கெட்டியாகி சுவாசத்தை தடை செய்யவது தான். அப்போது இதை கொடுத்ததால் சளியை இளக்கி கரைத்து தண்ணியாட்டம் ஊற்றி போய்விடும். பிறகு ஏது நோய். சேத்துமாம், ஆஸ்துமா, நிமோனியா, புளுரஷி என்ற பெயர்கள் எல்லாம் எதற்க்கு இப்போது, பெயர் தேவையில்லை அல்லவா.
குறிப்பு
ஆகவே தான் டாக்டர் சாமுவேல் ஹானிமேன் அவர்கள் நோயின் பெயர்கள் எல்லாம் கற்பனை, லேப் டெஸ்ட்டு என்பது எல்லாம் பித்தலாட்டம், அதை பார்த்து மருந்து தருகிறேன் என்பது ஏமாற்று வேலை என்கிறார்.
APIS – MELLIFICA - அபிஸ் மெல்லிபிகர்
தேனீ கொடுக்கின் விஷம்.
தேனீயின் கொடுக்கின் விஷம். விஷபூச்சிகள் கடித்த இடத்தில் மட்டும் மய, மயன்னு, விரு, விருன்னு இருக்கும், உடன் படுத்தே கிடப்பார். கண் மேல் இமை, வீக்கம். இது சுரப்பு நோயின் போதும்;, காமாலை போன்ற நோயின் போதும் தெரியும். நோயாளி கூறுவார் கண் வலிக்குதுங்க, இமையை அழுத்துகிறதுங்க என்பார்கள். (கண் முழியை உருட்ட முடியலை என்றால் OP.) கண்ணில் மை போட்ட மாதிரி பிசு, பிசுன்னு இருக்கிறது என்றால் ARG-N.
குறிப்பு
இப்படி வார்த்தையின் பதத்தை மிக, மிக முக்கியமாக கண்டு உரிய மருந்தை தர வேண்டும். கடித்த இடத்தில் வலி மேலே ஏறினால் LED. கடித்த இடத்தில் இருந்து வலி கீழே இறங்கினால் KALMIA. கடித்த இடத்தில் சுடு தண்ணி ஒத்தடம் கொடுத்தால் ARS. பச்ச தண்ணி பட்டால் CALC. பேட்டரி செல் மூலம் சைக்கிள் டைனமோ மூலம் கிடைக்கும் குறைந்த மின் சக்தியை பாய்ச்சினால் நல்லாயிருக்குதுங்க என்றால் PHOS..