ALUMINA அலுமினர் அலுமினியம்.
மூலம்: வண்டியிலிருந்து கீழே விழுந்து சாவேன் என்றால் ALUM, ARS.. சிறிது அழுக்கு என்றாலும், முடியில் வெள்ளை முடி இருந்தால் அதை வெட்டுவதும், டை அடிப்பதும் போன்றவற்றை (மெதுவாக) பொறுமையாக செய்வார்கள். பிறர் பொருளை திருடுவார்கள். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள், கத்தியைப் பார்த்தால் தற்கொலை விருப்பம் வரும். ஆனால் இரத்தத்தைப்பார்த்தால் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள். மூக்கு நுனியில் வெடிப்பு, தெரிந்தவரை பார்த்தால் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள். தெரிந்தவரை பார்த்தால் கூட எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். காலம் மெதுவாக போவது போல இருக்கும். எனக்கு பைத்தியம் பிடிப்பது உறுதி என்பார்கள். பெயிண்ட் அடிப்பவர்களுக்கு தொல்லை என்றால், மலம் கொஞ்சம் வந்தவுடன் பெட்டக்ஸை தட்டி விடுவார் ALUM. (இதே போல் தினமும் செய்தால் TARENT.).) எப்போதும் படுத்துக் கொண்டேயிருக்க விருப்பம். 12 மருந்துகளில் இது முக்கிய மருந்து. பாதத்திற்கு அடியில் ஏதோ சானியோ, மலமோ, ஒட்டடையோ ஏதோ மென்மையான பொருள் அப்பிக் கொண்டு இருக்கிற மாதிரி ஓர் உணர்வு இருக்குதுங்க என்பார்கள். கால் மெதுமெதுவென இருக்கிறது என்பார்கள் மலம் ஒரு பெரிய உருண்டையாக களிமண் போல பிசு, பிசுன்னு, ஆஸனவாயில் அப்பிக் கொண்டு வரும். கந்தல் துணி, காகிதம், ஸ்ராங்கான காப்பி, டீ, அரிசி, சாம்பல், துண்டு காகிதம் போன்றவற்றை சாப்பிட விருப்பம். உப்பும், உருளைகிழங்கும் சாப்பிட்டால் தொல்லை தருகிறது என்பார்கள். நீண்ட நாட்களாக வெள்ளைப்பாடு. அதாவது மாதவிலக்கு முடிந்த பின்பு, வெள்ளைப்பாடு தோன்றி அடுத்த மாதம் வரை வெள்ளைபடுது என்பார்கள். வெள்ளைபாடு குதிங்கால் வரை பால் போல வரும் அந்தயிடம் புண்ணாகிவிடும். வயிற்றில் இருந்து ஏதோ ஒரு பந்து மாதிரி மேலே வருவது போல மாயமாக வயிற்றில் தெரியும், கத்தி, துப்பாக்கி பார்த்தவுடன் தற்கொலை செய்து கொள்ள விருப்பம். தலைவலி எனக்கொரு மாதிரி வருதுங்க என்பார்கள். நானா பேசிகிறேன், ஆத்தா, முனி, பேய் பேசுகிறது என்பார்கள். வண்டியில் போகும் போதும், நடந்து போகும் போதும், பின்னாடி ஏதாவது வந்து இடித்து விடுமோன்னு பயம் இருக்கும்;. அரிசி, சுண்ணாம்பு, களிமண் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் இவர்களுக்கு இருக்கும். மிகுந்த குழப்பம் மிக்கவர்கள். அன்று பார்த்தது அவரா என்று குழம்பி விடுவார்கள். ஓயாது ஏதோ ஒரு துக்கம் ஏற்படுவது போன்ற எண்ணம் இருக்கும். ஏதோ ஒரு குரல் எழுப்புவதும் அதைப் பற்றி கவலைப்படுவதும் துக்கப்படுவதுமாக இருப்பார். பொய்யான தோற்றம் ஏற்படுவது போல் ஏற்படும். நெருப்பு பந்தம் மேலே ஏறுவது போல் தோற்றம். உருள்வது போல் இப்படி ஒரு பொய்யான தோற்றம். அவசரம் பட்டு பட்டு ஞாபகசக்தி முழுவதும் இழந்து விடுவார்கள். இதனால் தன் பெயரை கூட மறப்பார்கள். இதை எண்ணி, எண்ணி தன் தலையே வேறொருவர் தலை போல் காணப்படும். இதனால் தனக்கு பைத்தியம் பிடிக்கும் என்ற எண்ணம் வரும். இதனால் தனக்கு ஏற்படும் வலி சிறு நேரம் கழித்து தான் தெரியும். நரம்பு மண்டலம் செயலிழந்து விடும். மலம் கழிவது கூட தெரியாது. அதனால் படுக்கையில் மலம் கழிந்து விடுவோமா என்ற பயம் இருக்கும். உணர்ச்சி இழப்பின் காரணமாக மலம் முக்கி கழிவார்கள். பாட்டில் பால் குடிப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கு இப்படி ஏற்படும். ரொம்ப நாள் நெஞ்சுகரிப்புக்கு இதுவே மருந்து. நெஞ்சு அடைப்பது போல் எண்ணம் இருக்கும். இதற்கு உணவு ஒட்டிக் கொள்வது தான் காரணம்.
AMMONIUM – CARBONICUM - அம்மோனியம் கார்போனிக்கம்
காரமான, நாற்றமான உப்பு (குதிரையின் மலம்).
இம் மருந்து பெரும்பாலும் பெண்களுக்கு பொருந்தும். தங்கள் விஷயங்களை மூடி மறைக்கும் இயல்புடைய பெண்கள். அடிக்கடி அழுகின்ற குணம் உடைய பெண்கள். மாத விலக்கு யோனியில் வருவதற்கு பதிலாக, வாய், மூக்கு, ஆஸன வாய் போன்ற உறுப்புகளில் இவர்களுக்கு கருப்பு நிறமான கட்டி, கட்டியான, கடுமையான நாற்றத்துடன், காரத்தன்மை வாய்ந்த இரத்தம் கொட்டும். இவர்கள் தானாகவே பேசிக்கொண்டும் (அ) பினாத்திக்கொண்டும் போவார்கள், வருவார்கள். மூக்கடைப்பு ஏற்படும், நள்ளிரவில் ஏற்பட்டு படுக்கையில் துள்ளி எழுவார்கள். தலைவலியானது தலை சிதறுவது போலவும், பயங்கரமாகவும், பட்டு, பட்டுன்னு அடிக்குது என்பார்கள். வெடிக்கிற மாதிரி என்றால் GLONE. அழுத்தி பிடித்தாலும் சூடான அறையில் இருந்தாலும் கொஞ்சம் நல்லாயிருக்குது என்பார்கள். காலையில் எழுந்தவுடன் முகம் கழுவும் போது மூக்கில் கைப்பட்டவுடன் தானாகவே இரத்தம் கொட, கொடன்னு இரத்தம் கொட்டும். இப்படி எங்கு கொட்டினாலும் ஒரே மருந்து இது தான். சில்லி மூக்கு உடைப்புக்கு நல்ல மருந்து. மூக்கு, வாய், டான்சில் யோனி போன்ற பகுதிகளில் தோல் உறிந்து, உறிந்து புண்கள் சுருண்டு கொண்டே வரும். நக சுற்றுக்கு நல்ல மருந்து. உடம்பில் மக்காசோளம் போல மருவு உருண்டை, உருண்டையாக இருந்தால் இது நல்ல மருந்து. பூச்சிக்கடி, தேனீ, தேள் போன்றவைகள் கொட்டிய பிறகு அங்கு கருப்பு நிற இரத்தம் கட்டிக் கொண்டால் இதுதான் மருந்து. சளி, பேதி, எச்சில், வெள்ளைபாடு, தீட்டு போன்றவைகள் மிகுந்த காரத்தன்மையுடையது. ஆனால் பெண் கூறுவாள் தீட்டு, வெள்ளைபாடு, தொடையில் பட்டால் புண்ணாகுது, தோல் உறியுது என்பாள். நுரையீரல் கணத்திற்கு இது நல்ல மருந்து. டாக்டர் கென்ட் குறிப்பில் பார்த்துக்கொள்ளவும். இரவு நேரத்தில் சளி, சூடான அறையில் இருந்தால் சுகம் என்பார்கள். அடிப்பட்ட பிறகும் பயந்ததிலிருந்தும் கருப்பு நிறமான இரத்தம் உறையாமல் வந்து கொண்டேயிருந்தாலும், மாத விலக்கு சட்டி கழுவிய தண்ணியாட்டம் வந்து கொண்டேயிருக்கிறது என்றாலும் இதுதான் மருந்து. இதன் குணம் கருப்பு நிற இரத்தம், மற்றும் கட்டி, கட்டியாக, உடன் கழிவு பொருட்கள் காரத்தன்மையும், பட்டயிடதத்தில் புண்ணாக்கி தோல் உறிய செய்யும். இதே மாதிரி சுத்த சிவப்பு என்றால் IPECAC.
AMMONIUM – MURIATICUM - அம்மோனியம் முரியாட்டிக்கம்
அம்மோனியத்தின் உப்பு மட்டும்.
இது விசேஷமாக, குண்டான சதை கால்கள் தொழ, தொழுத்தும், பாதம் மட்டும் மிக, மிக மெலிதாக இருக்கும். மூலத்தில் வலி ஏற்படும். மூலத்தில் வரும் நீர், காரமாகவும், இரணம் போலவும், குத்துவது போலவும், வலிக்கும். இவர்கள் மலம் கழியும் போது ஒரு பெரிய பந்து மாதிரி மலம் உள்ளே உருண்டு கொண்டே இருக்கும். வெளியே வராது. மிகவும் சிரமப்பட்டு கழிந்த பிறகும் ஒரு மணி நேரம் ஆன பிறகும் போகலை என்பார்கள். கோழி முட்டையின் வெள்ளை கரு போல வெள்ளை படுது என்பார்கள். அப்ப வயிற்றை கவ்வி பிடிக்குது என்பார்கள். நடக்கும் போது தொடையும், தொடையும் ஒரஞ்சி இரத்தம் வடியுது, புண்ணாகி விடுதுங்க என்பார்கள். மலக்காற்று பெரிய சப்தத்துடன் நிறைய போகுது என்பார்கள். மனம் மிகுந்த வருத்தம், அப்படியே வெறுப்போடு, வேதனையோடு, துன்பத்தோடு ஸ்தம்பித்து போய் பித்து பிடித்து உட்கார்ந்து விடுவார். இவ்வளவுக்கும் கண்ணீர் வராது. ஆனால் மனம் அழுது கொண்டேயிருக்கும். பிறரோடு இவர்கள் உரையாடும் போது மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்வார். எரிச்சலோடு இருப்பார். உடன் கோபப்படுவார். ஒரு குறிப்பிட்ட நபரையோ, பொருளையோ, கடுமையாக வெறுப்பார்கள். அப்படி வெறுப்பதிலிருந்து தன்னை மாற்றி கொள்ள இயலாது. காலத்துக்கு முன்னதாக மாதவிலக்கு, அப்படியே கொட்டும். அடிவயிற்று வலியானது முதுகு பக்கம் இழுக்கும். மாதவிலக்கு குபுக், குபுக்குன்னு படும். இவர்களுக்கு மாதவிலக்கு இரவு நேரம், (அ) தூங்கும் போது தான் தோன்றும். மலம் கழிய, சிறுநீர் கழிய முக்கும் போது மாதவிலக்கு குபுக், குபுக்குன்னு படும். அதே மாதிரி வெள்ளைபாடும் குபுக், குபுக்குன்னு வலியோடு படும். அப்போது யோனி உதடுகளை சுற்றிலும் கிள்ளுவது போல வலி ஏற்படும். இதே மாதிரி உருண்டை மலத்தை வெளியேற்றிய பிறகும் கிள்ளுவது போல ஆஸனத்தில் வலிக்கும்.
AMYLENUM – NITROSUM - அமிலினம் நைட்ரோஸம்
அமில் என்ற திராவகமும், இராஜ திராவகமும் கலந்த கலவை.
இது பெரும்பாலும் இளம்பெண்களுக்கு தற்காலத்தில் முக்கியமாக தேவைப்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. அடிக்கடி மாதவிலக்கை தள்ளி போக செய்ய வேண்டும் என்பதற்காக மாதவிலக்கை நிறுத்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டதாலும், கருப்பையின் இயக்கங்கள் மழுங்கி வலியில்லாமல் போய்விடும். இந்த வலியானது இருதயத்திற்கு சென்று நாடிதுடிப்பை அதிகப்படுத்தி அதனால் இதயம் பலஹீனப்பட்டு பின்பு மெதுவாக துடிக்கும். மேலும், உள் உறுப்புகளை வெட்டி எடுத்த பின்பும் இந்த நிலை வரலாம். முகத்தில் இரத்தம் தேங்கி கொண்டால் BELL,GLON. இவர்களுக்கு பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும். அதனால் இரவு படுத்திருக்கும்போது திக்குன்னு எழுந்து திறந்த வெளி காற்றுக்கு ஓடுவார்கள். இவரது ஒற்றை தலைவலியானது கீழே இறங்கி, காலர் எலும்பு வரை பரவி நிற்கும். இதய துடிப்பானது இவர்களுக்கு கூக்குரல் போடுவது போல துடிக்கும். முகம், வயிறு, மார்பு, முதுகு போன்ற உடல் பகுதிகளில் வியர்வை கொட்டும். எதிர்பார்ப்பு நமக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா, பாத்ரூமுக்கு நம்மை பிடித்து கொண்டு போகமாட்டார்களா என்றும், இதுபோன்ற உதவிகளை எதிர்பார்ப்பார்கள். பெண்ணுக்கு இல்லற நினைப்பு வந்தவுடன் வாய்ப்பு கிடைக்கும் வரை தாங்கமாட்டாள். காமம் மிகுதியாகி விரல்களை கொண்டோ, வேறு எதையாவது கொண்டோ, உதடுகளை தேய்த்து, தேய்த்து இன்பத்தைப் பெற்று கொள்ளுவாள். இப்படி அடிக்கடி செய்வதால் ஜீவ சக்தி நீர் செலவழிந்து உண்மையான உடலுறவு கொள்ள முடியாது, நோயாளியும் ஆகி விடுவார்.
குறிப்பு
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் விமானிகள் போர்காலத்தில் போர் நேரத்தில் மாதவிலக்கு தோற்றினால் வேலை பாதிக்குமே, அப்போது மாதவிலக்கை நிறுத்தலாம் என்று கண்டுபிடிக்கபட்டது தான் இப்போது இருக்கும் ஹலோபதி மருந்துகள். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் ஊருக்கு போவதற்கும், கோவில், விரதம், பண்டிகை, திருமணம், எங்க வீட்டுகாரர், மகன், ஐயப்பன் மலைக்கு போகிறார்கள் சமையல் செய்ய வேண்டும். அதனால் மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அதன் பின் தோன்றும் இருதய வியாதிகளுக்கு இதுதான் மருந்து. சித்தாவிலும் இதே போல கருப்பையை கெடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் இருதய வியாதிகளுக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் பொருளாதாரம், நாடு பிடிக்கும் ஆசை, உயர்ந்த பதவி, மேல் பதவி பிடிக்க வேண்டும் என்பதற்க்காக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைக்காக நாசமடைகிறோம் என்பதை உணர வேண்டும்.