ALLIUM CEPA அல்லியம் சீபர் வெங்காயம்
மூலம்: கருப்பை எடுத்த பின்பு கருப்பையில் வலி. கால் எடுத்த பின்பு எடுத்த காலில் வலி (அ) புண் என்றால் ஒரே மருந்து இது தான். மற்றும் சளி பிடித்த போதோ, கண்நோயின் போதோ, வேறு எந்த காரணத்தினாலும், கண்ணில் நீர் வடியுது என்பார்கள். கண்ணில் வருகிற தண்ணி காரமாகவும், மூக்கில் வருகிற தண்ணீர் ஜிலு, ஜிலுன்னு வருது என்பார்கள். அதாவது வெங்காயம் உறித்தால் கண்ணில் தண்ணி காரமா வருதே அப்படி வருது என்பார். இதே மாதிரி மற்றொருவர் சொல்வார், கண்ணில் வருகிற தண்ணி ஜிலு, ஜிலுன்னும் மூக்கில் வருகிற தண்ணி (சளி) காரமா இருக்குதுங்க என்றால் EUPHARESIA. இதே இடத்தில் பெண்ணுக்கு சிறுத்த யோனி இல்லறத்தில் ஈடுபட முடியாத நிலைக்கு ALLIAM SAT. தந்தால் அந்த குறை நீங்கி விடும். குறிப்பு:- திருமணம் ஆன பெண்ணை கணவன் விட்டு விட்டான் சண்டை. ஏன் என்று கேட்டதற்கு வயதுக்கு வராமல் பெண்னை திருமணம் செய்து கொடுத்திட்டாங்க என்று குற்றம் சாட்டினால் காரணம் அது வல்ல. சிறுத்த யோனி தான் காரணம். ALL-SAT. தந்து குறை நீங்கியது.
ALOE – SOCOTRINA - ஆலோ சகோட்ரினர் ஆலோ
(நீர் வாழை) செடியின் கோந்து.
இது முக்கியமாக ஆஸனவாயில் வேலை செய்யும் நல்ல மருந்து. அதாவது மலம் ஆனது தண்ணியாட்டமோ, பேதியாட்டமோ, போனால் இந்த குறி மேலோங்கி நிற்கும். காற்று பிரியும் போது மலம் கொஞ்சம் ஒழிகிவிடும். கேட்டால் காற்று தாங்க பிரிகிறது என்பார்கள். மலம் வந்தது தெரியலை என்பார்கள். காற்று பிரியும் போது மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் ஒரே மருந்து. இது சிறுவர்களிடமும், நோயாளிகளிடமும், வயதானவர்களிடமும் தெரியும். (காலையில் எழுந்தவுடன் மலம் கழிய அவசரமாக ஓடினால் SULPHUR. காற்றோடு மலமும் பீச்சுன்னு அடித்தால் PODO. மலம் மட்டும் பீச்சுன்னு அடித்தால் CROTON - TIG. மாவு கரைத்த மாதிரி புளுக்கை, புளுக்கையா மலம் வரும் அது கூட தெரியாது APIS. வயிறை அழுத்திப்பிடித்துக் கொண்டு ஓடினால் COLOCYNTH. குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் வயதானவர்கள் நோயாளிகள் அனைவருக்கும் நோய் தாக்கிய பின்பு இப்படி மலக்காற்று விடும் போது அதனுடன்மலமும் வந்து விட்டால் மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் மருந்து ALOE. தனக்கு காற்றுடன் மலம் வந்து விட்டால் அதை எண்ணி எண்ணி அறிவே மலுங்கி விடும்.