Chellamnote
Dr.S.V.D. Chellam****Dr.S. Madhavan
Dr. SVD செல்லம் கூறிய வழிமுறைகளின் தொகுப்பு.
இந்த உலகிற்கு அன்போடு வழங்கும் ஆறாவது நூல்
Dr. S.V.D. செல்லம் கூறிய வழிமுறைகளின் தொகுப்பு.
பொருள் - அணிந்துரையாளர்கள் கருத்துரைகள்.
திருமதி. மு. நவரத்தினம், பேராசிரியை,
கருர் அறிவுத்திருக்கோயில்.
6வது நூல் செல்லம் ரெபரெட்டரி& H.K.S.V. ஆகியோரது ரெபரெட்டரி தொகுப்பு.
மனித உடம்பில் நோய் வந்தால் மனமும் பாதிக்கப்படும். மனம் பாதிக்கப்பட்டால் உடலும் பாதிக்கப்படும். உதாரணம் -
கையில் அடிப்பட்டால், கையில் வலி என்றால், பின் மனம் பாதிக்கபடும். சூழ்நிலையின் காரணமாகவும், மனமும் பாதிக்கப்பட்டால், உடல் நலம் கெடும், உடம்பு, மனம் இரண்டும் சேர்ந்து பாதிக்கப்பட்டால் தான் நோய் எனப்படும். இந்நோயை சரி செய்ய வேண்டுமானால் உடம்பு, மனம் இரண்டையும் சரி செய்தால் தான் உடல் முழுவதும் குணமாகும்.
உதாரணம்:- அலோபதி மருத்துவ முறையில் ஒவ்வொரு உறுப்பிற்கும் சிறப்பு மருத்துவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் ஓமியோபதி பிற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும், மாறுபட்டது. உடம்பு, மனம் இரண்டையும் சரி செய்ய முதலில் நோயாளியின் மனநிலைக்கேற்றவாறு, நோயறிந்து சரியான மருந்தை தேர்வு செய்து நோயாளிக்கு கொடுத்து மனதையும், சரி செய்து பின்பு உடல் மற்றும் உறுப்பு நோயையும் சரி செய்யப்படுகிறது.
மருந்தை வீரியப்படுத்தும் முறை:-
ஹோமியோபதி முறையில் மருந்தை உருவாக்குதல் எப்படி? என்பதை பாரப்போம். மருந்தை வீரியப்படுத்தினால் தான் அது ஹோமியோபதியாகும். இல்லையென்றால் அது சித்த மருத்துவ முறையாகும். மருந்துகளை வீரியப்படுத்தும் முறையில் தான் அதனுள் இருக்கும் தெய்வீக ஆற்றலை வெளிக் கொண்டு வர முடியும். எப்படி கொண்டு வருவது? மூன்று விதமான முறைகளில் மருந்துகள் உருவாக்கப்படுகிறது. (வீரியம்)
- டெசிமல் பொட்டன்சி (Decimal Potency) தசாம்சம் 1* 10
- சென்டிசிமல் பொட்டன்சி (Centicimal Potency) சதாம்சம் 1* 100 3. மில்லிசிமல் பொட்டன்சி (Millecimal Potency) * 999 டெசிமல் பொட்டன்சியாக மாற்றும் முறை.
- மருந்தின் மூலம் 1 பங்கு ரூ 9 பங்கு ஆல்கஹால் சேர்த்து 50 முறை நன்கு குழுக்கினால் - 1 வது பொட்டன்சி.
- 1 வது பொட்டன்சி மருந்திலிருந்து இப்போது 1 பங்கு எடுத்து ரூ 9 பங்கு ஆல்கஹால் சேர்த்து 50 முறை குழுக்கினால் - 2 வது பொட்டன்சி.
- 2 வது பொட்டன்சி 1 பங்கு எடுத்து ரூ 9 பங்கு ஆல்கஹால் சேர்த்து 50 முறை குழுக்கினால் - 3 வது பொட்டன்சி.
- 3 வது பொட்டன்சி 1 பங்கு எடுத்து ரூ 9 பங்கு ஆல்கஹால் சேர்த்து 50 முறை குழுக்கினால் - 4 வது பொட்டன்சி. இவ்வாறு வீரியப்படுத்தப்படுகிறது. (அ) ஆற்றலாக்கப்படுகிறது. இதை தசாம்சம் என்பர். Iசதாம்சம் என்றால் 1 க்கு 99 விகிதம். 3. மில்லி சிமா என்றால் 1 க்கு 999 பங்கு ஆல்கஹால். இந்த முறை படி மனித உடல் மனம் படும் துன்பத்திற்கு ஏற்றவாறு தக்க மருத்தையும், நோயாளிக்கு தேவையான வீரீயத்தில் கொடுத்தால் கண்டிப்பாக நோய் குணமாகும். பெற்ற சாபமே பாவமாகி உயிர் துன்புற்று உடல் துன்பமாகி அதை தான் உயிர் இயக்கத்தில் தடையைதான் உறுப்பில் நோய் எனப்படுகிறது.
சிறப்பம்சம் :-
ஒவ்வொரு மனிதனின் தனித் தன்மைக்கேற்றாற் போல் மருந்து தேர்வு செய்யப்படுகிறது. இதுவே உண்மை ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பு மருந்துகள் வீரியப்படுத்தப்பட்ட (மருந்தை அல்ல. ஆற்றலை தான் பயன் படுத்தப்படுகிறது) இம் முறையில் குறிப்பிட்ட பதிவு கழிந்து, கழிந்து நோய் விரைவாக, இதமாக, முழுமையாக நோயைக் குணப்படுத்தப்படுகிறது. மனதை அடிப்படையாக வைத்து மருந்து கொடுப்பதால் மனநோயும், உடல் நோயையும் சரி செய்து மனிதனை மேம்பட்ட மனிதனாக்குகிறது. இதுவே இம் மருத்துவத்தின் மேம்பட்ட பெருமையும், சிறப்புமாகும்.
வினாக்கள் :-
பகுதி - அ.
-
வியாதி வருவதற்கு முக்கிய காரணங்கள் என்ன?
-
உடலை இயக்குவதற்கு தேவையான சக்தி எதிலிருந்து கிடைக்கிறது?
-
உப்புசம் என்றால் என்ன?
-
உணவின் வகைகள் என்னென்ன?
-
பசி எவ்வாறு எழுகிறது?
-
நாம் உண்ணும் உணவில் என்னென்ன சத்துக்கள் அடங்கி இருக்க வேண்டும்?
-
இயற்கை உணவு என்றால் என்ன?
-
அலோபதி மருத்துவம் என்றால் என்ன?
-
சித்த மருத்துவம் என்றால் என்ன?
-
ஆயுர்வேதம் என்றால் என்ன?
-
யுனானி மருத்துவம் என்றால் என்ன?
-
ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? பகுதி - ஆ
-
உடல் நலம் சீராக இருக்க உணவு உட்கொள்ளும் முறையை விளக்குக?
-
சாத்வீக, தாமச, ராஜஸ உணவு பற்றி விவரி?
-
மூன்று வேலைகளிலும் நாம் உண்ணும் உணவு எவ்வாறு அமைய வேண்டும்?
-
ஐந்தின் அளவு முறையை விளக்குக?
-
அலோபதி மருத்துவத்தால் ஏற்படும் நன்மை, தீமையை விளக்குக?
-
சித்த மருத்துவம் நமக்கு எப்படி பயன் அளிப்பதாக உள்ளது?
-
ஆயூர்வேத மருத்துவம் நம் நாட்டுக்கு எப்படி ஒத்ததாக உள்ளது?
-
ஓமியோபதி மருத்துவம் எவ்வாறு அளிக்கப்படுகிறது? அதன் சிறப்பம்சங்களை விவரி?
மேலே கண்டதைப் பற்றி சிறப்பாக தெரிந்துக் கொண்டவரால் தான் சிறப்பாக ஹோமியோபதி வைத்தியம் செய்ய முடியும் என்பது புரிந்து விட்டது.
எனது அனுபவம்
எனது காலில் பல நாட்களாக தோல் உரிந்து கொண்டே வந்தது. ஒரே அரிப்பாக இருந்தது. நான் Dr. J.T. ஜோசப் M.D.H. என்பவரிடம் சென்று ஹோமியோபதி மருந்து வாங்கி சாப்பிட்டேன். எனக்கு பூரணமாக குணம் அடைந்தது. அவர் கரூர் பஸ்ஸ்டேண்டில் எதிரில் சரவணபவ ஓட்டல் மாடியில் (ஜெர்மன் ஆப்டிக்கல்ஸ்) உள்ளே (கிரேஸ்) ஹோமியோபதி மருத்துவமனை வைத்துள்ளார். டாக்டருக்கு வயது 96. இன்னும் நன்றாக பொலிவுடன் உடல் வளமாக உள்ளார். அற்புதமாக ஆசிர்வாதம் செய்து குணமாக பேசி மருந்து கொடுத்து குணப்படுத்தினார். அன்பும் கருணையுமானவர். உலகில் எனக்கு தெரிந்த மருத்துவத்தில், ஹோமியோபதி மிக, மிக சிறந்த மருத்துவம். இதில் பக்க, தீய விளைவுகள் இல்லை. பத்தியம் இல்லை. தாமதமாக மருந்து வேலை செய்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் நோயை குணப்படுத்த கால தாமதம் ஆக தானே செய்யும். இதில் முழுமையாக, பூரணமாக குணமாகி விடுகிறது. ஆகவே நூலாசிhpயரான Dr.S..மாதவன் அவர்கள் தன்னுடைய குழுவின் உதவியோடு அதி அற்புதமான ஒரு மருந்து காண் ஏடு (Repeortary)தொகுத்து கொடுத்துள்ளார். இது காலத்தால் அழியாத ஹோமியோபதி மருத்துவ வல்லுநர்களின் அனுபவ தொகுப்புகளை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து எளிய தமிழில் நமக்கு வழங்கியுள்ளார். மற்றும் பகுதி 2 என்ற REPORTERY -ல் மிக சுருக்கமானது குறிகளையும், அதற்குத் தக்க மருந்துகளையும், கனப்பொழுதில் தேர்வு செய்யும் படியான ஒரு அதி அற்புதமான தொகுப்பை அவரது சொந்த அனுபவத்தின் மூலமும், அவருடைய குழுவின் அனுபவத்தின் மூலமும், ஒரே மருந்தை பலருக்கு கொடுத்து வெற்றி கண்ட அனுபவத்தையும், பல நூற்றுக்கணக்கான நோயாளியை குணப்படுத்திய அந்த அனுபவங்களையும் குறிகளையும், அதற்கு தக்க மருந்துக்களையும் வழங்கிய தொகுப்பு இதுதான் என தெரிகிறது. தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்பதற்கு இணங்க, தகுதியுள்ள அனைவரும் இதை படித்து தொண்டு செய்ய வேண்டுமென்றும், தேவையுள்ள அனைவரும், மருந்து பெற்று உண்டு, பிணி நீங்கி மகிழ்ச்சியடைய வேண்டுமென்றும், உலகமே ஒரு குடும்பம் என்றும் கூறிய தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய கருத்துக்கும், கொள்கைக்கும் உட்பட்டு இப்பணியை, உலக மக்கள் அனைவருக்கும் தொண்டாக செய்து உள்ளார், என்பது எனக்கு புரிகிறது. அவரும், அவரது கல்வி குழுவும்
வாழ்க வளமுடன். வாழ்க வையகம் என வாழ்த்தி மகிழ்கிறேன்.
இப்படிக்கு மு. நவரத்தினம் பேராசிரியை, அறிவுத்திருக்கோயில், கரூர். 3.12.2007.
**இந்த உலகிற்கு அன்போடு வழங்கும் ஆறாவது நூல்
Dr. S.V.D. செல்லம் கூறிய வழிமுறைகளின் தொகுப்பு.
பொருள் - அணிந்துரையாளர்கள் கருத்துரைகள்.
திருமதி. மு. நவரத்தினம், பேராசிரியை,
கருர் அறிவுத்திருக்கோயில்.
6வது நூல் செல்லம் ரெபரெட்டரி& H.K.S.V. ஆகியோரது ரெபரெட்டரி தொகுப்பு.**
உதாரணம் -
உதாரணம்:-
மருந்தை வீரியப்படுத்தும் முறை:-
சிறப்பம்சம் :-
வினாக்கள் :-
பகுதி - அ.
பகுதி - ஆ
எனது அனுபவம்