THLASPI BURSA PASTORIS CAPSELLA தலசிபுர்ஸா பெஸ்டோரிஸ் காப்சல்லர்

மூலம்: பூ இலையோடு பறித்து செய்தவை. (மரம்).

இம் மருந்து சிறுநீரிலும் மற்ற உறுப்புகளில் இருந்தும் இரத்தப் போக்கு ஏற்படும். அதற்கு உண்டான மருந்து இது. சிறுநீரில் (அல்புமினியுரியா) ALBUMINURIA என்ற முட்டை சத்து சேர்ந்து வந்திடும். அப்போது சிறுநீர் எண்ணெய் கலந்த மாதிரி இருக்கும். சிறுநீர் செல்லும் பாதை நரம்புகளில் நாள்பட்ட பலஹுனமிருக்கும். அப்பகுதியில் சிறு, சிறு கட்டிகளும் கச கசா மாதிரி இருக்கும். அதனால் சிறுநீர் வரும் போது இரத்தமும் வரும். சிறுநீர் புற வழியில் வேக்காடு ஏற்படும். சிறுநீர் கழியும் போது இழுக்கும் படியான வலி ஏற்பட்டு கட்டிகள் கீழே சொத்து,சொத்துனு விழும். சிறுநீரை பிடித்து பார்த்தால் மோரில் வெண்ணெய் மிதப்பது போல கட்டிகள் இருக்கும். சிறுநீர் பையிலிருந்து சிறுநீர் துவாரம் வரையுள்ள குழாய்களில் தான் இம் மருந்துக்குரியவர்களுக்கு நோயிருக்கும். (அதுவும் நெருப்பில் சுட்ட காயங்கள் போல் இருக்கும் BURNET.)

URTICA, CROC, TRILL, MILLEFOL.

கண்களும், முகமும் உப்பியிருக்கும். உடனே மூக்கில் இரத்தம் ஊத்தும். (சில்லி மூக்கு) மயக்கம் வரும். எழுந்து நின்றவுடன் தலைவலி வரும். மாலை நேரங்களில் நெற்றி வலி. தலைப்பகுதியில் தோலுறிதல். காது சந்திலும் தோல் உரியும். நாக்கின் மீது ஏதோ வெள்ளை நிறத்தில் தடவியது போலிருக்கம். வாயிலும், உதட்டிலும் வெடிப்பிருக்கும். வலது கண்ணில் கூரான பொருளைக் கொண்டு குத்துவது போன்ற வலியும், இழுத்து பிடிப்பதும் ஏற்படும். இந்த வலி மேல் நோக்கி செல்லும். மூக்கில் ஆப்ரேசன் செய்யும் போது (செய்த பிறகு) அந்த இடத்தில் இரத்தம் வந்தால் அதை நிறுத்த இந்த மருந்தைத் தரலாம். முக்கியமாக மூக்கில் இரத்தப் போக்கு அதிகமாக வெளியேறும்.

விந்துக் குழாய்கள் தடித்து அடிப்பட்டது போல வலிக்கும். நடக்கும் போதும், சவாரி செய்யும் போதும் வலி ஏற்படும். இடைபட்ட போக்கு ஏராளமாக போகும். இரத்தமாக ஊத்தும். அதிகமான சிறுநீர் வெளியேறும். உடன் கடுமையான திருகும் படியான வயிறு வலி. ஒவ்வொரு முறையும், மாறி, மாறி இரத்தம் வரும். இது முக்கியம். மாதவிலக்கிற்கு முன்பும், பின்பும், வெள்ளைபாடு அது இரத்தம் கலந்த மாதிரியும் வரும். கருப்பு நிறமான இரத்தமும் வரும். நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். கருப்பையில் இரணமாட்டம் வலி ஏற்படும். பிறப்பு உறுப்பு வாயிலும் வலி ஏற்படும். மாதவிடாய் ஆரம்பத்தில் லேசான இரத்தப் போக்கும் 3இ4 கழித்து நிற்கும் நேரத்தில் லேசான போக்கும் இருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்க விருப்பம். சிறுநீர் அதிகமாகவும் வரும். அது பாஸ்பேட் வாடை அடிக்கும். சிறுநீரில் பாஸ்பேட் கற்கள் காணப்படும். இது நாள்பட்டதாக இருக்கும். மூத்திரக் காயில் திருகு போன்ற வலி. சிறுநீரில் அதிகப்படியான காரம் இருக்கும். சிறுநீரின் படிவு செங்கல் தூள் போல இருக்கும். சிறுநீர் (போக) கழிக்க ஓடுவார்கள். ஆனால் கொஞ்சமாகத்தான் வரும். வெள்ளிக் கம்பி (சிலாக்) போட்டவர்களுக்கு அதன் பின் ஏற்படும் தொல்லைகளுக்கு இது பயன்படும்.

உறவு:- URTICA, CROC, TRILL, MILLEFOL.