STANNUM - METALLICUM ஸ்டன்னம் மெட்டாலிக்கம்
மூலம்: துரு பிடிச்ச தகரம்.
இது பிரதானமாக(அதிகமாக) முகுளத்தையும், சுவாச கோச மண்டலத்தையும் தாக்கும். சுவாச பைகள் பலஹுனம் அடைந்து காச நோய் ஏற்பட்டு விடும். பேசினால் உடனே தொண்டையும், நெஞ்சும், பலஹூனம் அடைந்திடும். படிப்படியாக வலி வருவதும், போவதுமாகயிருக்கும். வருத்தமும், கவலையும் iதரியமும் இல்லாத மாதிரியிருக்கும் நபருக்கு இது பொருந்தும். நெற்றியில், உச்சியிலும் வலி, சளியும், இரும்பலும், விடாமல் இருக்கும். காதுக்கு கீழ் சுற்றிலும் வெளியே புண். குமட்டலோடு சளி இருக்கும். சமையல் வாசனைப்பட்டால் குமட்டும். சாப்பிட்டால் கசக்கும். பட்டினி கிடந்தால் பராவயில்லை என்பார். ரொம்ப அழுத்தினால் வயிறு வலி குறைவு. கருப்பை பலஹூனத்தால் முன்னாடியே மாத விலக்கு ஏற்பட்டு இரத்த போக்கு கொட்டும். இதனால் கருப்பை தொங்கி விடும். வேகமான இரும்பலும், கணைத்து, கணைத்து சளியை துப்புவார். மாலையில் வறண்ட இரும்பல், சிரிக்கும் போதும், பாடும் போதும், பேசும் போதும் கஷ்டம். குரல் முதல் நெஞ்சு வரை எரியும். பச்சை நிறமான இனிப்பான சளியை துப்புவார். நள்ளிரவில் குட்டையான சுவாசமும், குறைந்த சளியும் இருக்கும். காச நோயாளிக்கு சளி மற்றும் அவருடைய T.B காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து. துருப்பு பிடித்த மாதிரி இரும்பலில் சளியை காரி துப்புவார். இந்த மருந்து துரு பிடித்த தகரத்திலிருந்து செய்வதால் அதே குணம் இருக்கலாம். பார்த்துக்கணும். T.B க்கு, T.B காரர்களுக்கு , காய்ச்சலுக்கும் சளி இரும்பலுக்கும் இந்த அடையாளம் இருக்குதாணு பார்த்துக் கொள்ளணும்.