SPONGIA - TOSTA ஸ்பாஜியா டோஸ்டர்
மூலம்: வறுக்கப்பட்ட கடல் பஞ்சு என்ற உயிரினம்.
இம் மருந்துக்குரியவர்கள் மரம் அறுக்கர மாதிரி மூச்சி, எளப்பு, ஆஸ்துமாவில் வேற எந்த நுரையீரல் சுவாசம் இப்படி என்றால் இது தான் மருந்து. T.B யிலும் இப்படி வறட்டு சுவாச கோச செயல்கள், இருமல் இப்படி இரவில் வறட்சி மர்,மர் சப்தம் மூச்சி இரவில் யாரோ கழுத்தை நசுக்கற மாதிரி மூச்சி திணறி எழுந்தால் இது. இதே மாதிரி இதய வியாதிக்காரர் இரவில் துள்ளி எழுந்தால் LOBIELIA.. இம் மருந்துக்கு தலையணை (அ) பஞ்சை மூக்கில் (அ) நெஞ்சில் வைத்து சுவாச கோசத்தை தடை அழுத்துகிற மாதிரி செய்வது போல உணர்வு இருக்கும். மரம் அறுக்கும் மர பட்டறைகளில் மரம் அறுப்பது போல மூச்சி சப்தம் (மர்,மர், என்று சப்தம்) வந்தால் இது தான் மருந்து. ஆகவே சளி பிடித்துகிச்சிங்க, நுரையீரல் வறட்சிக்கு இந்த மருந்து கொடுத்து சரியாக வில்லை என்றால், இரும்புதுங்கஎன்று எதையோ நம்மிடம் கூறலாம். குழந்தையை பார்த்தால் கூட நெஞ்சிக்கிட்டே பார்த்தால் மூச்சி சப்தம் சளியோடு கல,கல வென கேட்கும் அதற்கு மருந்து வேறு. கரட்டு முரட்டு என்றும், புர்,புர் என்றும் இப்படி பல வகையில் கேட்கும் ஆனால் இம் மருந்து மர், மர்னு (அ) சர்,சர்னு மரம் அறுக்கற மாதிரி வரும்.