POTHOS - FOETIDUS போத்ஸ் போட்பிடஸ்

மூலம்: அழுகிய மேலை நாட்டு முட்டை கோஸ்.

இது ஆஸ்துமாவிக்கு முக்கிய மருந்தாகும். தூசு, துப்புபட்ட பிறகு தாங்க ஆஸ்துமா இழுக்குது என்பார்கள். நெல்லு அடிக்கிற இடத்தில், நெல்லு மிஷினில், நூல் ஆலை, சிமெண்ட் பேக்டரியில், ஒட்டடை அடிப்பவர்கள், அடிச்சி பெருக்கிய பிறகு, இது போல ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இழுக்குதுங்க என்றுச் சொன்னால் இது தான் முக்கிய மருந்து. இழுத்து, இழுத்து முதுகு எல்லாம் வலிக்குதுங்க என்பார். மனக்குறி பெரிதாக எதுவும் இல்லை. ஆஸ்துமாவைப் பற்றியும் அதன் கொடுமையை பற்றியே கூறுவார்கள். சிறுவருக்கு இழுத்து, இழுத்து அடிவயிறே முறுக்கி விரைப்பு தட்டி விடும். பேசி கொண்டு இருக்கும் போது நினைப்பு எங்கியோ போய்விடும். எரிச்சல், தலைவலி குறிப்பிட்ட இடத்தில் தலைவலி, இழுக்கற மாதிரி இருக்கும். திறந்த வெளியில் சுகம் PLUS. முதுகு தண்டு வளைந்து சிவந்து இருக்கும், ஓயாமல் மூச்சு சத்தம், அதனால் தொண்டையும் நெஞ்சும் வலிக்கும். மூச்சு, இழுக்கவும், விடவும் கஷ்டம், இழுக்கவே முடியலைங்க என்பார். வாயை திறந்து இப்படி சுவாசிக்க வேண்டி வருவதால் நாக்கு மறுத்துப் போச்சி என்பார். இதனால் எகிறும், பற்களும் மறுத்து போய் விடும். மலம் போனதும் (ஆஸ்துமா) தணிந்து கஷ்டம் போய் விட்டது என்பார். தூசு ஒவ்வாமைக்கு இது முக்கிய மருந்து.