PODOPHYLLUM - PELYATUM போடோபில்லம் பெட்யாட்டம்

மூலம்: வெய்யில் காலத்தில் மட்டுமே விளையும் ஆப்பிள்.

குறிப்பிட்டக் காலத்தில் பயன்படும் மருந்து. கருப்பை மாதவிலக்கில் நிறைய போய்,போய் கருப்பையே தொங்கி போய் விடும். அதே போல மலம் அடிக்கடி கழிந்தோ, முக்கி, முக்கியே, ஆஸனவாய் பிதுங்கி விடும். சில குழந்தைகளையோ, பெரியவர்களையோ மலம் கழியும் போது பார்த்தால் பம்பரம் மாதிரி ஆஸனவாய் பிதுங்கி இருக்கும். கழுவி கொண்டு ஆஸனத்தை உள்ளே தள்ளி விடுவார்கள். பெண் கூறுவாள் மலம் கழியும் போது பெரிய பந்து மாதிரி முக்கும் போது, யோனிக்கு உள்ளே வந்து முட்டுதுங்க என்பாள். எழுந்தவுடன் சரியாக போய் விடும். இது கருப்பை தொங்கி விடுவது தான் காரணம். ஆஸனவாய் பிதுங்கி பாவடை நாடா (அ) டேப் மாதிரி பட்டையாக மலம் வரும். இதற்கு அடையாளம் சிறுவன் மலம் கழியும் போது எழுந்து வரமாட்டான். ஆஸனத்தை பார்த்தால் பிதுங்கியிருக்கும். CROTON-TIG ல் வயிறு அலசல் இருக்கும். ALOSE –ல் மலம் தெரியாமல் வந்து விடும். தண்ணீர் வலையிலிருந்து வருவது போன்ற கொடக், கொடக் சப்தம் PODO. ஈரல் சம்பந்தப்பட்ட வயிற்று வலி வயிறை தடவுவார்கள். சிறுநீர்பையில் கல் அடைத்துக்கும், அப்போது கீழே விழுந்து உருளுவதும், தடவுவதுமாக இருப்பார்கள். பல்லை இறுக்கி கடிப்பார்கள். இப்போது கல் சிறிது நகரும், சுகமும் கிடைக்கும். அழுத்தி பிடித்தால் மருந்து வேறு. இதய நோய் இருக்குது வந்திடும். அதனால் இறந்திடுவோம் என்றும். நாளங்கள், கருப்பை, ஓவரி, ஆஸனவாய் யோனி போன்றவை தளர்ந்து போகும். பலஹீனத்தால், நான்கு நாள் மலச்சிக்கலும், நான்கு நாள் பேதியும் காணப்படும். எர்ணியாவுக்கும், யோனி பிதுக்கத்துக்கும் நல்ல மருந்து. தலை:- கிரு, கிருப்பு ஏற்பட்டு குப்புறவோ, (அ) சைடுயில் இருபுறங்களிலும் சாய்ந்து விடுவார். முகம் சூடாகவும், வாய் கசக்குது என்று சொல்லுவார். மயக்கத்தில் பாதி கண் திறந்து இருக்கும். இப்படி காலை நேரத்தில் நேரும். இரவில் பல்லை அரைப்பதும், வாய் சீழ் நாற்றம் அடிக்கும்.