PALLADIUM பல்லாடியம்

மூலம்: ஓர் உலோகத்திலிருந்து செய்யப்படுபவை.

பெண்களின் சினைப்பைகளுக்கு பயன்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. இவர்கள் குழப்பமான மனநிலையுடையவர்களாகவே இருப்பார்கள். எல்லாமே குழப்பமாகவே இருக்கும். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் குழப்பமான மனநிலையுடையவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இவர்கள் அம்மா, தங்கைகளுக்கும், சினைப்பை முட்டையில் கோளாறுகள் இருக்கும். இது நாள்பட்டதாக பரம்பரையாக வரும். இதனால் உடலின் மற்ற பகுதிகளையும் அழித்துக் கொண்டே வரும். முதுகில் இருக்கும் மோட்டார் எனப்படும் நரம்பு பலஹீனமாகிவிடும். இதனால் சின்ன வேலை செய்தால் கூட பலஹீனமாகிவிடும். வெறுப்பும் ஏற்படும். அழுகை வரும், ஆதரவு இல்லையே என்ற எண்ணமிருக்கும். சாப்பிடும் போது பலம் வரும். உடனேயே ஆணவமும் (கர்வமும்) வந்திடும். நான் தான் பெரிய பலசாலி என்ற எண்ணம், நண்பர்கள் கிடைத்து விட்டால் பயங்கரமாக சிரிப்பார்கள். அடிக்கடி திக்கு, திக்குனு விழுவார்கள். பிறர் மனம் பாதிக்கும் படி வெடுக், வெடுக்கென பேசுவார்கள். அதனால் இவர்களை நண்பர்கள் விரும்ப மாட்டார்கள். மேல் உறுப்புகளில் வலி அதிகமாகும். தலையில் இழுப்பது போல, முதுகிலிருந்து மேலே இழுப்பது போல் உணர்வு, மண்டை நரம்பெல்லாம் இழுக்கும். மாலை நேரத்தில் தலையில் வலி ஏற்பட்டு காதுக்கு செல்லும். பிறகு அடுத்தக் காது வரை பரவும். உடன் எரிச்சல், புளியேப்பம் வருது என்றும், இது போன்ற குழப்பம் மிகுந்த நோய்களையே கூறுவார்கள்.

வயிற்றில், தொப்புளில் துப்பாக்கி குண்டு பட்டது போல் வலி. இந்த வலியானது இரைப்பைக்கு போகும். வயிற்றினுள் உறுத்துவது போலிருக்கும். இரணமாட்டம் எரிச்சல் பல விதமான வலிகள் அடிவயிற்றில் காணப்படும். அடி வயிறு வீங்கியும் இருக்கும். ஏராளமான மலக்காற்று பிரியும்.

கர்ப்பபை தொங்கி முறுக்கிக் கொள்ளும். முன்புறம் இருக்க வேண்டியது முறுக்கி, பின்புறம் சென்றுவிடும். அதில் பலவிதமான வலிகள் தொல்லைகள் ஏற்படும்.

வலது புறம் வலி ஏற்படும். வலது புற முதுகும், பகுதியிலும் வலி ஏற்படும். காரணம் கருப்பை முறுக்கி வலது புற முதுகில் குத்தும். மாதவிலக்கு காலத்தில் பைத்தியம் பிடித்தது போல இருக்கும். அப்போது கர்பப்பையில் வெட்டுவது போல வலியிருக்கும். மலம் கழிந்தால் சரியாகிவிடும். வலது புற சினைப்iயில் வலியும், வீக்கமும் இருக்கும். யோனிப்பகுதிக்கு மேலுள்ள கூடக எலும்பில் எரியிர மாதிரி, சுடுவது போல வலியிருக்கும். கர்ப்பபை தொங்கி விடுவது தான் இதன் முக்கிய குறி. அப்போது அடி வயிற்றை நீவினால் சுகமாக இருக்கும். ஆனால் உடனே வலியும் ஏற்படும். மார்பைச் சுற்றிலும் வலி ஏற்படும். ஒரு பக்க மார்பிலிருந்து மற்றொரு மார்புக்கு வலி வரும். மாதவிடாய் காலத்தில் போக்கும் உடனே வெள்ளையும் படும். வெள்ளைப்படுவது தெளிவாகவேத் தெரியும். பால் கொடுக்கும் தாய்க்கும், மாதவிலக்கு ஏற்படும். வலது புற மார்பு காம்பில் வலி தெரியும். இவைகள் தொடர்ந்து மாறி, மாறி வந்தால், மார்பு வலி, கர்பப்பையில் வலி வந்தால், முதுகு வலி, இடுப்பு வலி வந்தால் அடிவயிறு வலி எனவும் வரும். இந்த மாதிரி வலி ஏற்கனவே எனக்கு வந்திருக்கிறது என்றும் சொல்வார்கள்.

கைக் கால்களில் நைவுக் காயம், கல்லால் அடித்தது போல் வலி இருக்கும். களைப்பும் இருக்கும். மூட்டுகளிலும், நரம்பு இழுத்துப் பிடித்துக்கும். அடிப்பட்டது போல் வலி, பாரம் களைப்பு இருக்கும். குறிப்பாக கால் பெருவிரல், மூட்டில் இது போன்ற வலி இருக்கும். வலது புற தோளில் வாத வலி ஏற்படும். உடல் முழுவதும் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். உறவான மருந்து. (கலந்து வேலை செய்தல்) PLAT. ஒப்பிட்டு பார்க்கும் மருந்து:- ARG, HELON, LIL, APIS.

மருந்தின் வீரியம் - 6, 30 சிறந்தது.