OCIMUM – CANUIM ஓசிமம் கானாப்பியம்

மூலம்: பிரேஷ் நாட்டில் விளையும் சத்து மிக்க ஒரு தாவரம்.

இது முக்கியமாக சிறுநீரகம், சிறுநீர்பை, சிறுநீர் பாதைகளில் தோன்றும் தொல்லைகளுக்கு பொருந்தும். எப்படி என்றால் இவர்களுக்கு சிறுநீரில் உப்பு அதிகமாகிவிடும். பின்பு சிறுநீர் போனால், சிவப்பு நிறத்தில் மணல் மாதிரி சிறுநீரில் வந்து விடும். அதை ஒரு பாட்டிலில ;பிடித்து பார்த்தால் இப்படி சிறுநீரில் மணல் மாதிரி படிவங்கள் காணப்படும். இதற்கு இதுவே முக்கிய மருந்து. தொடையிடுக்கில் உள்ள கோளம் திடீர்ன்னு வீங்கி போயிடும். நெறி கட்டிகிச்சி என்பார்கள். வலது தொடையில் இப்படி வீங்கும். நினைநீர் கோளத்துக்கும், சிறுநீர் குழாய் பாதை வீங்கி தொல்லை தரும்.

சிறுநீரகம்:- குறிப்பாக இது சிறுநீரக தொல்லைக்கு பொருந்தும். அதாவது கட்டி எடுத்த பிறகும், காரமான சிறுநீரும், பல விதமான வலியும், சிறுநீரில் அதிகம், இரத்தம் வந்தாலும் பல விதமான வலிகளுக்கும் முக்கிய காரணம் இதுவே.

ஆண்:- இடது புற விதைக் கொட்டை வீங்கி சூடாக இருக்கும்.

பெண்:- பெண் பிறப்பு உறுப்பு, உதடு வீங்கி பெருத்து இருக்கும். மேட்டு பகுதியில் கத்தியில் அறுப்பது போன்ற வலி. மார்பு பெரியதாகவும், கனமாகவும் இருக்குது என்றும், காம்பு மேல் கை பட்டாலும் வலிக்குது என்பாள். பிறப்பு, உறுப்பை சொறிந்து, சொறிந்து உறுப்பே தொங்கி போய்விடும்.

சிறுநீர்:- சிறுநீரில் தட்ட பயிர் மாதிரி கற்களும், வெண்ணெய் மாதிரி திவளைகளும், தயிர் மாதிரியும், கோந்து மாதிரியும், இரத்த மாதிரியும், சிறுநீரில் இருக்கும். சிறுநீர் காரமாகவும் இருக்கும்.