NATRUM - PHOSPHORICUM நேட்ரம் பாஸ்பாரிக்கம்

மூலம்: பாஸ்பேட்டும், உப்பும் கலந்த கலவை.

மஞ்சள் நிறமாக பசை மாதிரி, நாக்கின் பின்புறமும், அன் நாக்கிலும் இருக்கும். தங்க கலர் மாதிரி இருக்கும். புளிச்ச ஏப்பம், புளிச்ச வாந்தி, பச்சை கலரில் பேதியும் இருக்கும். பெண் உறுப்பில் காரமான நீர் கசிந்து, கசிந்து மலடி ஆகிவிடுவாள். ஆண்களுக்கு கடுமையான விருப்பம் இருக்கும். ஆனால் பலம் இருக்காது. தண்ணீர் மாதிரி விந்து கசியும். தலை வலியின் போது புளிச்ச தண்ணீர் மாதிரி வாந்தியில் வரும். வாயில் சூடாகவும், எரிச்சலோடும் ஆவி வரும். நாள்பட்ட காயங்களில புளிச்ச நாற்றம் அடிக்கும். வாயில் புளிப்பு தெரியும். அல்சரின் போது வாந்தி புளித்த சுவை தெரியும். மலக்காற்று கூட புளிப்பாக வீசுது என்பார். ஆண், பெண் இருவருக்கும் சரி இல்லற விருப்பம் நிறைய இருக்கும். ஆனால் குறைவாகத் தான் ஈடுபட முடியும். காரணம் பலம் இருக்காது. விந்துவும் சரி, நாதமும் சரி நீத்து போய் தண்ணியாட்டம் மாறி புளிப்பாக ஆகிவிடும். ஆகவே இவர்களது வெளிப்பாடு எல்லாம் புளிப்பாகவே இருக்கும். இவர்களுக்கு மூக்கு சளியானது கெட்டியாகவும், மஞ்சள் நிறத்துடனும், நாற்றத்துடனும் இருக்கும். சருமம்:- உடலில் பல பகுதிகளில் அரிப்பும், மஞ்சள் நிறமான தடிப்பும் காணப்படும். விசேஷமாக பகல் நேரத்தில் பாதம் ஐஸ் மாதிரி குளிர்ந்து இருக்கும். இரவில் எரியும். இவர்களுக்கு தோற்றும் வாத நோயானது முழங்கால் மூட்டில் மட்டுமே ஏற்படும்.