NATRUM - MUR நேட்ரம் முர்
சாப்பிடும் நமது உப்பு.
இம் மருந்து அடிக்கடி தேவைப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்று. ஏக்கம் மிகுதியாக இவர்களுக்கு இருக்கும். காமம் மிகுதி, உறவினர் (அ) விருப்பமான பொருள் இழப்பினால் ஏக்கம் மிகுதி, பித்து பிடித்த மாதிரி இருப்பார். உப்பை விரும்பி சாப்பிடுவார்கள் இது முக்கிய குறி. கால் மரமாட்டம் மருத்து இருக்குது, உடம்பு மரமாட்டம், கல்லாட்டம் இருக்குது என்றாலும், உப்பு, இனிப்பு, செக்ஸ் போன்றவைகள் அதிக விருப்பம் என்றால் இந்த மருந்து பயன்படும். நிகழ்காலத்தில் (தற்போது) மகிழ்ச்சியாக இருந்தாலும் கடந்த காலத்தில் இருந்த பசி, பட்டினி, வறுமை போன்ற துன்பங்களையே கூறுவார்கள். தூங்கி எழுந்தவுடன் தலைவலி. கவலை என்றால். நோயின் போதும், கவலையின் போதும், மேலும், மேலும்,அதிகமாக தொல்லை என்றாலும், தேம்பி, தேம்பி அழுவார். அப்போது சமாதனப்படுத்தினால் தேம்புவார் (அ) கோபப்படுவார். சமாதானப்படுத்துபவரை திட்டினால் STAPH சமாதானம் அடைந்தால் PULS. கோபமாக இருந்தால் CHAM. கோபத்தின் போது சிறுமியின் முகத்தைப் பார்த்தாலே உறுமும் ANT-C. குளிர்காய்ச்சலின் போது முகம் சிவக்கும். சூடும் குளிரும், மாறி, மாறி வரும். நூறு சுத்திகளை தலையில் லேசாக தட்டுவது போல இருக்கும். பெண் காமத்தை சரி படுத்தி கொள்ள முடியாமல் ஏங்கி பித்து பிடித்த மாதிரி ஆகிவிடுவாள். அப்படியே ஸ்தம்பித்து விட்டால் KALI - BROM.எவ்வளவு உயர்வு பெண் என்றாலும், மிக, மிக தாழந்தவனோடும் உடல் உறவு கொள்வாள். ஏக்கத்துக்கு இதுவும் ஏழு மருந்தில் ஒரு மருந்து.