LACHESIS லாச்சஸ்

மூலம்: கட்டு வீரியன் பாம்பின் விஷம்.

சந்தேகத்துக்கு உலகில் பெரிய மருந்து இது தான். என் மாமியார், கொழுந்தியாங்க எனக்கு தீங்கு செய்யறாங்க என்று கண்டிப்பாக ஒருவரைக் கூறி உறுதியாக சந்தேகப்பட்டு (இதை) கூறினால் இது. உலகில் உள்ளவற்றின் மீதும், தன் மீதும், தன் மகள், மனைவி மீதும், இது போன்று எல்லாவற்றின் மீதும் எல்லாப் பொருட்களின் மீதும் சந்தேகப்படும் நபர் சொல்லுவார்கள், என் மாமியா (அ) கணவன் (அ) உறவினர்கள் என்று ஒரு நபரை குறிப்பிட்டு அவர்கள்தான் எனக்க மருந்து வெச்சிட்டாங்க, சூனியம் வெச்சிட்டாங்க, என்னுடைய நோய்கள் எல்லாம் அவர்கள் சாபம் வைத்து தான் வந்தது, என்று இப்படி ஒரு நபரை உறுதியாக சந்தேகப்பட்டு சொன்னால் இது தான் மருந்து. மற்றும் கனவில் கூட வந்து கற்பழிச்சிகிட்டே இருக்கிறாங்க என்று குறிப்பிட்ட நபரை கூறினால் இது. (இதே மாதிரி இப்படியிருக்குமா, அப்படி இருக்குமானு சந்தேகப்பட்டால் HYOS.) செக்ஸ் வெறுப்பு கனவில் யாரோ கற்பழிக்கிற மாதிரி என்றால் ஒரே மருந்து SEP. இடது பொறியில் ஒற்றை தலைவலியானது இரும்பு ஆணி வைத்து அடித்து குடைகிற மாதிரி வலிக்குதுங்க என்பார். (இதே மாதிரி வலது பொறியில் மர ஆணி வைத்து குடைகிற மாதிரி என்றால் LYC.) இடது தலைவலியானது பரவி கண், தோள்பட்டை, தொண்டை வரை இடது புறமாக பரவும். தண்ணி முழுங்க முடியல, எச்சி கூட முழுங்க முடியலீங்க என்பார். ஆனால் சோறுப் போன்ற கெட்டிப் பொருள் இவர்களால் முழுங்க முடியும் இது தான் முக்கிய குறி. தொண்டையில் ஏதோ அடைக்குதுங்க என்பார். மேலே உள்ள குறிகள் இருந்தால் இது தான் மருந்து. மாதவிலக்கு நிற்கும் காலத்தில் இடது தொடைவலி என்றாலும், இடது புற பகுதி, இடது கால் என்றாலும் இது தான் மருந்து. (இதே மாதிரி வலது புறத்தில தொல்லை என்றால் மருந்து LYC.) இவர்களுடைய நாக்கைப் பார்த்தால் நீண்டும், நடுங்கிக் கொண்டும் இருக்கும். வெட்டி, வெட்டி பேசுவார்கள். கிராமத்தில் சொல்லுவார்கள் பாம்பு கொத்தற மாதிரி பார்க்கிறாள், கொத்தற மாதிரி பேசறாள் என்பார்கள். அது உண்மை தான். இது கட்டுவீரியன் பாம்பு விஷம், அப்படி தானே இருக்கும்.