LAC - DEFLORATUM லாக் டெப்லோராடம்
மூலம்: ஆடை எடுக்கப்பட்ட மாட்டுப் பாலில் இருந்து வீரியப்படுத்தியது.
இம் மருந்து காரர்களுக்கு சிறுநீர் ஏராளமாக போகும். சாப்பிட்ட சத்தெல்லாம அதிலேயே போய் விடும். தலைவலி பரவிக் கொண்டே இருக்கும். நெற்றிலும், பின் மண்டையிலும் காலையில் எழுந்தவுடன் வலி ஏற்படும். வலி உட்புறமாகவும் வலிக்கும். அதே சமயம் வாந்தியும் வரும். கண் பார்வை மங்கும், மலச்சிக்கலும் இருக்கும். மலம் கழியும்போது ரொம்ப கஷ்டம். அதனால் கத்துவார்கள். படுத்துக்கிடந்தாலும், கொஞ்சம் மாதவிலக்கு பட்டாலும் ரொம்ப அசதி. அடிவயிறு, ஆஸன வாயை அழுத்தினால் சுகம். தலைவலிக்கு பத்து போட்டுக் கொண்டால் சுகம். மலம் உருண்டையாக, பெரியதாக கல்லாட்டம் வரும். வரும் போது ஆஸன வாயை கிழித்து கொண்டு வரும். குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியின் போது உடம்பு முழுவதும் புளிப்பு நாற்றம் வீசும்.
LAC – FELINUM - லாக் ப்லினம்
பூனைப்பால்.
இம் மருந்துகாரர்கள் உயிர்சக்தி குறைந்தது போல அப்படியே கை, கால்கள் போட்டதை போட்டவர்களாகவே கிடப்பார்கள். ஆனால் கைக் கால்கள் விரைத்துக் காணப்படும். இவர்களது மனநிலை எப்படி என்றால் எந்த ஓர் இடத்திலும், மூலை ஓரங்களிலே அமருவார்கள். பெஞ்சில், கட்டிலில், சுவரின் மூலைப் பகுதியிலேயே அமருவார்கள். குறிப்பாக பெண்களிடம் இது காணப்படும். கண்கள் சுழன்றுக் கொண்டே இருக்கும். பெண்கள் என்றால் தன் எதிரியை பார்த்துக் கொண்டேயிருப்பாள். பிறகு உடனே கண்ணை மூடிக் கொள்வாள். புருவம், கண், எலும்பிலும், நெற்றியிலும் மந்தமான வலி இருக்கும். உச்சியில் தீடீரென வலி, தலைவலியின் போது சிறிது அசைந்தாலும், சவாரி செய்தாலும், வலி அதிகமாகும். பஸ்ஸில் போனதால் தலைவலி அதிகம் என்றால் இதைப் பார்க்கலாம். தலைவலி விட மாட்டிங்குதுங்க, கழுத்து நரம்பு, தண்டு வடத்தில் எல்லாம் வலி என்பார்கள். மண்ணீரல் தொல்லையினால் அப்பகுதியிலும் வலி. நெற்றியை அழுத்திப்பிடிப்பார்கள். (அ) தரையில் வைத்து அழுத்துவார்கள். பாரமான பொருளால் நெற்றிக்கு முட்டு கொடுப்பார்கள். அப்போது தலையும், கண்ணும் வலி. தாடை, வாயின் உட்புறத்தில் வலி. மூளையில் புளு நெண்டுவது போல் இருக்கும். தலையின் உச்சியினுள் வலிக்கும். இவர்களது தலைவலியானது கண் எலும்பினுள்ளிருந்து மேல் நோக்கி நெற்றி, மூளை, என தலை முழுவதும் பிராயணம் செய்து உச்சிக்கு வந்து வலி கொடுமைப் படுத்துது என்பார்கள். இரவில் நெற்றி பொட்டிலும் கண்ணிலும் வலி. கண்ணின் நடு முட்டையில் கூர்மையான பொருளால் சுளீர் என குத்துவது போன்ற வலியும், எரிச்சலும் விட்டு, விட்டு வரும். இதனால் கண்ணீர் அதிகமாக வரும். கீழ் இமையில் பாரம். அதனால் தடித்து விடும். கண்ணைச் சுற்றிலும் இடிப்பது போல வலிக்கும். கண் எலும்பின் வலி காரணமாக முதுகு எலும்பிலும் வலி ஏற்படும். படிக்கும் போது எழுத்துக்கள் ஓடுவது போன்ற ஓர் உணர்வும், மீறி படித்தால் கண் மந்தம் மற்றும் கண்ணில் தெறிப்பது போன்ற வலி, மீறி மேலும் முயற்சி செய்தால் துப்பாக்கில் சுட்டது போல வலி ஏற்படும். இதில் குழம்பி விடுவார்கள். கண் வலியினால் திடீரென குளிர் ஏற்படும். LAC – FELINUM . இம்மருந்தைப் பொருத்தவரை கண்களிலிருந்து பெரும்பாலான நோய்கள் ஏற்படும். (காரணம் பூனை கண் கூர்மையாக பார்க்கும் அல்லவா?) மலம் இரவு இரண்டு மணிக்கு தான் போகும். பூனையைப் போலவே நீளமாக வரும் மலம். பெண்களுக்கு மாதவிடாயின் இரத்தப்போக்கு மூன்று நாளும், நான்காவது நாள் வெள்ளைபாடாகவும் ஏற்படும். நுரையீரல் வறட்சி, கை மணிக்கட்டிலும், விரல்களிலும் வலி, கால் வலி, கால் வலியிருக்கும். பாதத்தை தொட்டால் ஜில்லிப்பாக இருக்கும். மந்தமான தூக்கமும், தூங்கிக் கொண்டே இருக்க விருப்பம் இருக்கும். காய்ச்சலின் போது சூடும், குளிரும் மாறி, மாறி வரும். பொதுவாக இம்மருந்தின் குணம் ரொம்ப அதிகமான கண் வலி தான். மற்றும் பயத்தில் அப்படியே விரைத்துக் கிடப்பார்கள். குடிகாரர்களிடம் கூட இதைப் பார்க்கலாம்.