EUPHORBIUM இப்போரியம்

மூலம்: வனத்தில் விளையும் விஷத்தன்மையுள்ள பெரிய வகை கற்றாழை.

இவர்கள் சகிப்பு தன்மை உள்ளவர்கள். வாழ்க்கையில் ஓயாமல் கவலை, கஷ்டம், நஷ்டம், ஏமாற்றம், இழப்பு இவைகளை இடைவிடாமல் தாங்கி, தாங்கி சித்ரவதைப்பட்டு, பட்டு உடல் உறுப்புகளில் நோய் (அ) வலிகளை சகிக்க முடியாத அளவு தாங்கி, தாங்கி முடிவாக சகிப்புதன்மையே புற்று நோயாக மாறிவிடும். அப்படி சகித்து கொண்ட பிறகு தோன்றும் புற்றுக்கு இது ஒன்றே தான் மருந்து. கோமாவில் படுத்திருக்கும் போது முட்டாள் தனமாக உளறுவார்கள். கண் விழிக்குள் பிப்பு எடுக்கும். மிக உணர்ச்சியாகி விடுவார்கள். கடிக்கிற மாதிரி, அறுக்கிற மாதிரி, வெட்டற மாதிரி, குத்துகிற மாதிரி இப்படி எல்லா விதமான வலிகளும் மனதிலும், உடலிலும் தோன்றும். சித்திரவதையும், சகிப்பு தன்மையும் தான் அதற்கு காரணம்.