CRATAEGUS – OXYAEANTHA க்ராட்டகஸ் ஆக்ஸியாந்தா

குண்டு பேரிக்காய்.

இந்த மருந்து காரர்கள் இதய நோயாளிகள். சிறிது வேலை செய்தாலும், இதயம் மர, மரவென சத்தம் கேட்கும், உடன் நகம் நீலம் பூரித்தும் இருக்கும். ஆனால் விரல்கள் மட்டும் சிவப்பாக இருக்கும் இது தான் இம் மருந்தின் முக்கிய குறி. (மூச்சு மர, மரவென சத்தம் கேட்டால் SPONG.) உடம்பு ஜில்லிட்டு இருக்கும், பலமில்லை என்பார். இது இதய துடிப்பு ஒழுங்கற்று தாறு மாறாக காணப்படும். இதை 3ஒ யில் 6ஒ க்குள் கொடுத்தால் இது இதயத்துக்கு ஒரு நல்ல டானிக் மாதிரி வேலை செய்யும். இதே இடத்தில் நகம் நீலம் பூரித்தால் CARB-V பார்க்கவும். இதயம் மட்டும் மர, மர, சத்தமா? மூச்சா என்று பார்த்து கொள்ளனும். உடம்பு ஜில்லிட்டவுடன் மற்ற மருந்துகளை பார்க்கவும். டாக்டர்கள் இதய வால்வு தேய்ந்து போச்சி என்றால் இது அப்போது முக்கிய இடம் வகிக்கும் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவு:- CAR-V, CAMPH, ARS, VERAT- ALB, CUPPURAM.. பார்த்துக் கொள்ளவும். மிக வேகமாக துடிப்பும் லேசான சத்தம் கேட்கும். இருதயத்துக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாயில் வலி, இதனால் மூச்சு திணறலும், இதைப் பற்றிய கவலையும், இதைப் பற்றியே அரைப் பைத்தியம் மாதிரி பேசிக் கொண்டிருப்பார். இதயம் வீக்கம் ஏற்பட்டு வேகமாக ஓடி நின்று விடும். உழைப்பு, உடலுறவு, வெப்ப அறை, சுத்தமான காற்று, மன அமைதியுடன் ஓய்வு எடுத்தால் சுகம் (அ) தணிந்து விடும். குறிப்பு:- இருதய நரம்புகளை பலம் பெற செய்யும் இதனை 3ஒ வீரியத்தில் உபயோகப்படுத்தலாம். அடிக்கடி, தினமும் கூட தர வேண்டி வரும். தரலாம்.