COLCHICUM-ACTUMNALE கோல்ச்சிகம் ஆக்டம்நல்
மூலம்: கோல்ச்சிகம் குங்கும பூ செடி இலை.
தட்டில் உள்ள குழம்பு வாசம் பட்டு குமட்டல் ஏற்பட்டாலும், பஸ் குலுங்கி குமட்டினாலும் இது. (உணவு பார்த்தாலே வெறுப்பு என்றாலும் ARS.) இது கற்பகாலங்களில் குமட்டுது, அசிங்கத்தை பார்த்தால் குமட்டுது, பிறர் வாந்தியை பார்த்தால் குமட்டுது, கக்கூஸ் வாடை, குப்பை, கூலம் போன் வாடையைப் பார்த்தால் குமட்டுது, ஏதோ ஒரு நோயோ, மனக்குறியோ சொல்லி குமட்டல் என்றால் இது தான் மருந்து. வண்டிகளின் பெட்ரோல் புகை பட்டு குமட்டினால் AMM- C. வாந்தியே வந்து விட்டால் IP. ஏதோ பாருங்க குமட்டுது பின்பு தான் தலைவலி, இடுப்பு வலி, காய்ச்சல் என்பார். எப்படியோ குமட்டல் என்றால் இது தான் மருந்து. அவரை பார்த்தா, நினைச்சா, பேச்சை எடுத்தா. நோயிலே வேறு எந்த நிகழ்ச்சி நிலைகளில் குமட்டினாலும், குமட்டுது என்றாலும் (வாந்தி அல்ல) இது தான் மருந்து. டைபாயிடு காய்ச்சலோ. மூட்டு வாத நோயோ, தோன்றி அதன் பிறகு இதய்ம் கெட்டு பிறகு சர்க்கரை வியாதி ஏற்பட்டால் இது பொருந்தும். வாசனையோ, நாற்றமோ. தூங்க முடியலை என்று சொல்லி, மூட்டு வலியை சொன்னால் இது பொருந்தும். குளிர் பருவம், வெய்யில் காலம், அசைந்தால் கனமான வாடை, நாற்றம், சூரிய உதயம், மறைவுகளில் மேற்கண்ட தொல்லைகளை கூறினால் இது. அதே நேரம் சூடாக போர்த்திக் கொள்ளுதல். சூடான அறை. உடலை முறுக்கினால் சுகம் என்றால் இது. குறிப்பு:- வாசனையோ நாற்றமோ. தாங்க முடியாமல் பிறகு, பெரிய மூட்டு வாத நோய், இருதய நோய், சர்க்கரை வியாதி தோன்றிவிடுதல். மிளகாயை முகர்ந்தால் கூட குமட்டுது என்பார்கள்.