CINA சினா

மூலம்: புழுக்களின் முட்டை.

சிறுவர், பெரியவர், ஆஸன வாயில் நாக்கு பூச்சி, புழுக்கள் தொல்லை என்றாலும், சிறுவர்கள் சூத்திலும், மூக்கிலும் விரலை விட்டு நோன்டுவார்கள். குடையுது என்று விரலை விட்டு குடைந்து கொண்டிருக்கும் சிறுவர்கள். குடையுது என்றும் கூறுவார்கள். மாலை நான்கு மணிக்கு குடைந்தால் LYC.. இரவில் மட்டும் குடைந்தால் SYPHIL, SULPH.நாக்கு பூச்சி இருக்குது என்பார்; SANDROBIRE. மிக, மிக, முன் கோபம் தாங்கவே முடியாத நிலையில் உள்ளவர்கள், இதை நாம் குழந்தைகளிடம் பார்க்கலாம்;. குழந்தையை பார்த்து கண்ணு, பாப்பா, ஹாய் என்று சொன்னாலே உரும்பும். தொட்டால் கோபம் CHAM.. இது பார்த்தாலே உரும்பும் கோபப்படும். கோபத்துக்கு ஒரே மருந்து இது தான். குறிப்பு:- (ஒரு காட்டில் வளர்க்கப்பட்ட நாய் யாரை பார்த்தும் குலைக்கலை, ஆனால் அதன் முகத்தை பார்த்தவுடன் உர் என்று செய்தது. அதற்கு இது பொருந்தும் டேய் ராமு என்ற பின்பு உரும்பினால் CHAM. இவ்வளவு தான் வேறுபாடுகள் தேவையான மருந்தை எடுக்க வேண்டும்.) குழந்தை தோள் மீது உயரமாக தூக்கி வைத்து கொள்ள சொல்லும். விரும்பும். ஆனால் இடுப்பில் வைக்கச் சொல்லாது, கொஞ்சுவதும் இதற்கு பிடிக்காது. இரும்பிய உடனே இதற்கு உடனே கோபம் வரும். பல் முளைக்கும் போது கூட இந்த கணம் வரும். காய்ச்சலுக்குப் பிறகு இதன் குணங்கள் (மாறும்). கெட்டுப் போயிடும். காலையில் எழும் போது மாதவிலக்கு ஏற்படும். குழந்தைகளுக்கு உயரமான இடத்தில் தூக்கி வைத்தால் சுகம். தொட்டிலை கூட உயரமாக வைத்து தான் ஆட்ட வேண்டும். வேகமாக ஆட்டினால் தான் சுகம் என்றால், CHAM.ஆபத்து ஏற்பட்டிடுமோ என்ற பயம், மாலையில் தனியா நடக்கும் போது காத்து பிடிச்சுக்குமோனு பயம். பிறரது குற்றத்தையே கண்டுபிடித்து குற்றம் சொல்லிக்கிட்டே இருப்பார்கள். பிறரை புகழ்ந்து பாராட்டி பேச பிடிக்காது. இவர்களை சமாதானப்படுத்தவோ, அடக்கவோ முடியாது, எதாவது குற்றத்தை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தனக்கு தரும் உதவியை புறக்கணித்தல், கேப்ரஸில் (CAPRASIS MIND.) நிறை வேறாத போது பிறகு ஏங்குதல், தேம்புதல், அகோரப் பசி நிறைய சாப்பிட்டும் உடல் தேராது, குணமும் கெட்டு விடும். பெரியவர்களுக்கு, என்றாலும் மேலே கூறிய குறிகள் பொருந்தும்.

COCCULUS – INDICUS - கோக்குலஸ் இண்டிகாஸ்

இந்திய கிளிஞ்சல்.

இம் மருந்துக்குரியவர்களை நாம் கிள்ளினால் கூட சிறிது நேரம் கழித்து தான் அவர்களுக்கு அந்த உணர்வு ஏற்படும். அவ்வளவு மந்தம். இடுப்புக்கு கீழ் பிப்பு, வாதம், உணர்வு அற்ற தன்மைக்கு நல்ல மருந்து COCC மற்றும் ABROT. தாடை அப்படியே பிடிச்சிகிச்சி, வாய் மூட முடியலை, திறக்க முடியலை என்று கூறுவார்கள். இவர்களுக்கு தூக்கம் கெட்டால் தொல்லை, இந்த நோய், அந்த நோய் எல்லாமே தூக்கம் கெட்ட பின்பு தாங்க வந்தது என்பார்கள். ஆனாலும் பிறருக்கு உதவி செய்ய தூக்கம் கெட்டு கூட வேலை செய்யும் தியாக மனப்பான்மை கொண்டவர். சாராயம் குடிப்பது, தாஸிடம் செல்வது போன்றவை தப்புனு தெரியுதுங்க. ஆனால் விட முடியலைங்க என்பார்கள். அடுத்த வீட்டில் உள்ள குழம்பு வாசத்தை கண்டு குமட்டல் எற்பட்டால் இது. தட்டில் உள்ளதை பார்த்து குமட்டல் எற்பட்டால் COLCH. சாப்பாடு உணவு பொருள்கள் மீது வெறுப்பு என்றால் ARS.சினிமா T.V. பார்த்து தூக்கம் கெட்டால் NUX-V.

பிறருக்காக அக்கறை எடுத்து இரவு, பகலாக உழைப்பவர், அதனால் தூக்கம் கெட்டால் இவருக்கு தொல்லை ஏற்படும். நாம் சொல்லும் சொல் மூளைக்கு போகாது, காதிலும், கருத்திலும் ஏறாது ஆன்மாவையும் உடம்பையும் தனிமைப் படுத்தி என்னால் வர முடியாது என்று கூறி குறிப்பிட்ட இடம் மறுத்து போச்சி என்றால். பையனுக்கு உடம்பு கெட்டு கணவனோ, மனைவியோ, குழந்தைகளோ நோய்வாய்பட்டிருந்தால் அவர்களை இரவு முழுக்க கண்விழித்து பார்த்துக்கிட்டேன். அதன் பிறகு தாங்க இந்த நோய் என்று கூறுவார்கள்.

COFFEA – CRUDA – காப்பியா குருடா

காப்பிக்கொட்டை.

இது பெரும்பாலும் பெண்களுக்கு, ரொம்ப மகிழ்ச்சியான நேரம், இன்பமான கனவு, காதல் மகிழ்ச்சியில் இப்படி மகிழ்ச்சியில் ஆடிப் போன பிறகு, தலைவலி ஏற்பட்டால் (மகிழ்ச்சியால்) சந்தோஷத்தால் பயமும், சந்தேகமும், மாறி, மாறி வருதல். வலியின் போது சந்தோஷமும், கவலையும் மாறி, மாறி வந்தால், உடலுறவு தான் விரும்பியவர்களுடன் கனவிலும், நினைவிலும். தேவர்களுடன் சொர்க்கத்தில் நான் இருப்பது போலவும், தனது இடம், பொருள், கிடைத்த வாழ்க்கை கணவன், குழந்தைகள் இப்படி எல்லாம் இன்பம், இனபம், சொர்கம் என்று மனதில் எண்ணி மகிழ்ந்து உருகி போய்விடுவார். பட்டினி கூட சுகம். குடிகார கணவன் கூட இன்பமானவனாக தெரியும். மகிழச்சியில் அடிக்கடி காப்பி குடிப்பார். காப்பி முறிவுக்கும், காப்பி விருப்பத்தை தணிக்கவும் இதுவே மருந்து. நரக வேதனை என்றால் இங்கு MERC. சொர்க்க மகிழ்ச்சி என்றால் COFFEA. சிரிப்பு , மகிழ்ச்சிக்கு பிறகு தலைவலி, பூ, அகர்பத்தி, சென்ட் வாசனை தாங்க முடியாது AUR, BELL, COLCH, IGN, NUX, SIL, LYC, PHOS. மகிழ்ச்சியை தாங்க முடியாது என்று கூறி, மேலே கண்ட வாசனையும் தாங்க முடியலை என்று கூறிவிட்டால் இது தான் மருந்து.