CHELONE செலோன்
மூலம்: பாம்பு தலை.
இது கல்லீரல் சம்பந்தப்பட்ட தொல்லைகளுக்கு பயன்படும். கல்லீரலில் ஏற்படும் வலியானது இடது புறம் பரவி, பின்பு கீழே இறங்கி விடும் என்பார். இவர்களுக்கு பயங்கரமான குளிர் காய்ச்சல் ஏற்படும். அப்படியே குளிர் எல்லா உறுப்புகளுக்கும் பரவும். பின்பு சருமத்தில் வந்து நின்று போய்விடும். குளிரின் போது மூச்சடைப்பு ஏற்படும். ஈரலில் அடைப்பு ஏற்பட்டு காமாலையில் முடிந்து விடும். ஈரல் கிண்ணமாட்டம் வட்டமாக ஆகிவிடும். சருமத்தின் மீது பலயிடங்களில் எதிரிகள் வந்து தாக்குதல் நடத்துகிற மாதிரியும், கூட்டம், கூட்டமாக வந்து என்னை தாக்கிற மாதிரியும் இருக்குது என்பார்.