CALCAREA- SULPHURICA கல்கேரியா சல்ப்யூரிகர்

மூலம்: கால்சியமும் கந்தகமும்.

வறண்ட, வட்டமான படைகள், செதில்களாக உதிறும். காதில் மஞ்சள் நிறத்துடன் சீழ் வரும். மூக்கில் குழ, குழப்பான சளி நிறைய இருக்கும். முக பருவில் பெரிய கொப்புளமாக தோன்றி சீழ் நாள்பட்டிருக்கும், உடன் மூக்கில் சளியும் இருக்கும். ஆஸன வாய் சுற்றி வலியில்லாமல் சீழ் கட்டிகள் மட்டும் தோன்றும். தாங்க முடியாத, நாள்பட்ட தலைவலி, இது முறை வைத்து தோன்றும். அப்போது குமட்டலும், கிரு, கிருப்பும் ஏற்படும். அதனால் எச்சில் சுரப்பி வீங்கி விடும். சரியாக தேர்வு செய்து மற்ற மருந்துகள் வேலை செய்யாத போது இதை கொடுத்தால் நன்கு வேலை செய்யும். இது குறுகிய கால மருந்து. ஆனால் காச நோய் காய்ச்சலுக்கு (அ) காச நோய்காரர்களுக்கு சீழ் கட்டி தோன்றினால் அப்போது இது நன்கு வேலை செய்யும். சளி சவ்விலும், கண் இமை படலங்களிலும், விஷம் மிகுந்த டான்சில் நோய்களிலும் இது நன்கு வேலை செய்யும். கடின உழைப்பு, சூடு உள்ள அறை, வெப்பத்தில் போர்வை போர்த்திய பிறகு நோய்கள் தோன்றிவிடும். குளிர்ச்சியிலும், குளிர்ந்த வெளி காற்றிலும் சுகமாக இருக்கிறது என்பார். பெண்:- லேட்டாக மாத விலக்கு பட்டுகிட்டே இருக்கிறது, தலைவலியும், பலஹீனமும் இருந்து கொண்டே இருக்கிறது என்பார்.