BERBERIS - VULGARIS பெர்பெரிஸ் வல்காரிஸ்

சொத்து கொழாய் பழம்.

திடீரென வலி தோன்றி உள்ள உறுப்பில் எல்லா திசைக்கும் பரவும். ரேடியேடிங் PAIN போல பரவும். இப்படி பரவும் வலிக்கு இது ஒரே மருந்து. முட்டியிலும், இடுப்பிலும் அழுத்தினால் சுகம். உடன் “கொர்க்” “கொர்க்” என்று சத்தம் வந்தால் BERB-V. சத்தமில்லை என்றால் BRY.வாதம், மூட்டு வலி சிறுநீரில் கற்கள் இருக்கும், தொல்லைத் தருகிறது என்பதற்கு இம் மருந்து தந்தால் குணமாகும். இல்லையெனில் ஆகாது. இடுப்பில் இருந்து அடிவயிற்றில் வலி. அதிலிருந்து சிறுநீர் பைக்கு வலி பரவும் இது போன்று பரவும் வலிக்கு ARS கொடுத்து குணமாக வில்லை என்றால் இது. சிறு நீரில் மற்ற உறுப்புகளில் இருக்கும் கற்களை கரைப்பதற்க்காக கொடுக்கிறார்கள். அது தவறான முறை தக்க குறிகளுடன் தான் இம் மருந்தை பயன்படுத்த வேண்டும். (ரேடியnடிங் என்றால் எல்லா பகுதிக்கும் பரவும் வலி என்பது பொருள்.) இடது கிட்னியில் வலி தோன்றி உடல் முழுவதும் பிளாடர், யூரிதர், தொடை, வயிறு என்று ரேடியேடிங் போல பரவும். வயிறு பகுதியில் வலி (சமுட்டியில் அடிப்பது போல) தோன்றி பரவும். முழங்கால் வரை கூட பரவும். அழுத்தினால் சுகம். மலக்காற்று வெளியேறினால் சுகம். சேகல் கூறுகையில் :- இந்த நிலையில் நாம் மேலே கண்டவற்றை விட அப்போது காணப்படும் மனப்பத பதைப்பு (RESTLESSNESS) மாறி, மாறி தொல்லை ஏற்படும். அதைப் பார்த்தால் போதும் என்கிறார். நான்(Dr.S.M.)கூறுகையில் இதை வைத்து பார்த்ததில் ARS கொடுத்து 2 நாளில் கல் வந்து விட்டது. மற்றொருவருக்கு BELL. கொடுத்து சுகம். குறிப்பு:- நமக்கு தத்துவம் அதாவது விஷேசமாக இம் மருந்தில் மட்டுமே காணப்படும் விசேஷ குறி தான் முக்கியம். இந்த குறியை வைத்து மருந்து தந்தால் அதுவே எல்லாவற்றையும் சரி செய்து விடும்.