BARYTA - MURIATICA பாரிடா முரியடிகம்
பேரியத்தினுடைய சுண்ணாம்பு சத்து.
காக்கை வலிப்பின் போது வயிற்றிலிருந்து கரண்ட் சேக் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். கரண்ட் சாக் மாதிரி என்பதற்கு வேற மருந்து வரும். ஆனால் காக்கை வலிப்பின் போது மட்டும் வயிற்றிலிருந்து சேக் அடிப்பது போல இருந்தால் B-M. நாடி துடிப்பு இவர்களுக்கு அதிகம் .அதாவது 120 வரை கூட துடிக்கும். மேல் நாடுகளில் துடிப்பு அதிகமாக இருப்பதற்கு இம் மருந்தை தருகிறார்கள். ஆனால் அது தவறான முறை. இவர்களது கோளம் பெருத்துக் காணப்படும். இதே மாதிரி கோளம் கல்லாட்டம் காணப்பட்டால் மருந்து B-C, ARS, BELL. இவர்களுக்கு காம எண்ணம் மிகுதி அதிலும் பெண்களுக்கு அதிகமாக காம எண்ணம் இருக்கும். ஆண்களுடன் உறவு கொள்ள முடியலையே என்று எண்ணி கொடுமைக்காரியாக மாறி, இரக்கமற்றவர்களாக மாறி விடுவார்கள். அதன் பின்பு பேய் பிடித்தவள் போன்று காணப்படுவாள். ஆசையை தீர்த்துக் கொள்ள முடியாததால் இப்படி ஆகிவிடுகிறார்கள். மற்றும் மனிதர்களால் நமக்கு கெடுதி வருமா என்று எண்ணி பயந்து கொண்டு இருப்பார்கள். மற்றும் பயமும் குனியும் போது மூளை ஆடுவது போன்ற உணர்வு தெரியும். மற்றும் சாப்பிட்ட பிறகு அசதி ஏற்படும். உடம்பு கணம் என்றால் BELL, GELS.இதே இடத்தில் வலி என்றால் BRY. முறிக்கினால் சுகம் என்றால் RHUS-T.இருப்பு கொள்ளாமல் இங்கும், அங்கும் அசைந்துக் கொண்டிருந்தால் ARS.அப்போது கோபம் ஏற்பட்டால் CHAM. கூச்சமிருந்தால் B-C.வாய்ப்புண்ணின் போது எச்சில் கூடப் பட முடியாது அவ்வளவு புண் என்றால் HEP-S. சீல் வந்து விட்டால் SIL. தலையில் குளிர்க்காற்று பட்டால் சுகம் ARS, B-C, B-M.