ARGENTUM - NITRICUM அர்ஜன்டம் நைட்ரிகம்
மூலம்: வெள்ளியும், எரிகார திராவகமும் கலந்த கலவை.
- குடித்த தண்ணீர் அவ்வளவும் சிறுநீராக வந்துடுதுங்க என்பார்கள். 2. ஏரிகரை மேலே நின்று கொண்டு காற்று வாங்கினால் சுகம். 3. உட்கார்ந்து இருக்கும் போது இதயம் நின்று போய்விடுமோன்னு பயம். 4. தூங்கி கொண்டு இருப்பவரை எழுப்பி தன் கஷ்டத்தை சொல்வார். 5. மாதவிலக்கின் போது ஏப்பம் வரும். 6. சர்க்கரை சாப்பிட்டால் தான் மலக்காற்று, மலமும் வரும் என்பார். 7, (மலை மீது) உயரத்திலிருந்து, தண்ணீரில் கிணற்றில் குதித்து சாவேன் என்பார். இவை ஏழும் இம் மருந்தின் தனி தன்மை வாய்ந்த குறிகள்;. மாலையில் கைப்படாமல் மூக்கில் இரத்தம், வந்தால், இனிப்பு விருப்பம், சர்க்கரையை அள்ளி, அள்ளி சாப்பிடுவதும், இனிப்பு சாப்பிட்ட பிறகு தொல்லை என்றாலும். மலை மேலே ஏற பயம் என்றால் இதுதான் மருந்து. இறங்க பயம் என்றால் BORAX. தலைவலியின் போது தலையை இருக்கி கட்டினால் சுகம் ARG-MET, CALC, HEP, MAG-M, PULS, BRY. வயிறு வலி சிறுக, சிறுக வந்து அதிகமாகி கொண்டே வந்து பிறகு டக்குனு மறையும் MILL-F.ஐஸ்கீரிம் சாப்பிட்டு வயிறு வலி ARS. தலையே வெடிக்கிற மாதிரி வலி என்றால் ஒரே மருந்து GLONE தான். காக்கா வலிப்பில் கண்ணீல் மை போட்ட மாதிரி இருக்குது என்பார்கள். இது இளம் விதவை பெண்களுக்கு இடைக்காலத்தில் மாதவிலக்கு தோன்றி, தோன்றி பெண் தன்மையே போய்விடும். மலடு ஆகிவிடுவார்கள். குளிர் நேரத்தின் போதும் போர்த்த மாட்டார். காரணம் இவருக்கு குளிர் காற்று விருப்பம்.
ARNICA – MONTANA - ஆர்னிக்கா மொண்டானர்
ஒரு விஷமுள்ள தாவரம்.
அடிப்பட்டதும் தர வேண்டிய முதல் மருந்து. ஆனால் குறி இருக்கணும். அதாவது அடிப்பட்ட பிறகு தாங்க வலி, அப்ப அடிப்பட்ட பிறகு தாங்க இந்த கஷ்டங்கள். அடிப்பட்ட மாதிரி வலிக்குது. அடிப்பட்ட இடத்தில் மோத முடியலை. காற்று கூட பட முடியலைங்க வலிக்குதுங்க என்று கூறுவார்கள். (அழுத்தினால் சுகம் BRY..) உருட்டினால் சுகம் என்றால் RHUS-T. சிவப்பு இரத்தம் வடிந்தால் IPEC. மூலத்தில் சிவப்பு இரத்தம் வடிந்தால் HAMMAMELIS. அடிப்பட்ட வரலாற்றையே கூறுவார். ஏதோ ஒரு நோயைச் சொல்லி அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்பார். பிறப்பு உறுப்பு, கண்கள், மூக்கு உட்பகுதி போன்ற இடத்தில் இருக்கும் மென்மையான நரம்புகள் அடிப்பட்டு விட்டால் STAPH. நரம்பில் வெட்டுப்பட்டு விட்டால் HYPER. சதையில் ஆழமாக வெட்டுப்பட்டு விட்டால் BELLIS - PER. . மண்டையில் அடிபட்டு விட்டால் RUTA.எலும்பு விரிசல் (அ) பிளவு ஏற்பட்டு விட்டால் SYMPH. ஆகவே, நமக்கு காமாலையோ, எய்ட்ஸ்ஸோ, எந்த நோயாக இருந்தாலும் கவலையில்லை, நமக்கு குறி தான் முக்கியம். நரம்பில் அடிப்பட்டு நய்வு (நசுங்கி) ஏற்பட்டால் HYPER.