ADRENALIN அட்ரனேலின்

மூலம்: அடர்னாலின் சுரப்பியை அரைக்கப்பட்டது.

இது மனிதர்களின் சிறுநீரகத்தின் மேல் உள்ள ஒரு சுரப்பி. அதிலில் இருந்து எடுக்கப்பட்டது தான் இது.

இதன் முக்கிய குறி என்னவென்றால்,மனம்,தலை, கண்கள். இப்படி கூறப்படுகிறது. குறிப்பாக தலைவலிகளை பற்றி தான் அதிகமாக கூறப்படுகிறது. மூளை நரம்பு பலஹீனத்தினால் சோர்வாக உள்ளது என்ற சொல்வார்கள். அதனால் மன வேலைகள் எதுவும் செய்ய முடியவில்லை என்று சொல்லுவார்கள். சோம்பலாக உள்ளது என்பார். வேலைகளை பார்த்தால் வெறுப்பாக உள்ளது என்பார். தலைவலியானது இடது பக்கம் தோன்றி வலது பக்கம் முடியும். காலை தூங்கி எழுந்தவுடன் ஒன்னுமே முடியலிங்க என்றும் சொல்வார். கண்ணில் வேலை செய்தாலும் கூட தலைவலி வந்து விடுதுங்க என்பார்.

கண் எலும்பு குழிக்குள் வலி துவங்கி விழியில் வந்து தங்குகிறது. அதனால் கண் வேக்காடு ஏற்பட்டு, அதனால் கண்ணை நன்றாக திறந்து பொருட்களை பார்க்க முடியவில்லை என்பார். பல விதமான வலிகள் வரும். இடது கண்ணிலும், நெற்றிலும் வரும் வலியானது அழுத்துகிற மாதிரி இருக்குது என்று சொல்வார்கள். காதுக்குள்ளேயும் வலி வந்து விடுகிறது என்பார். திறந்த வெளி காற்றில் இருந்தால் கொஞ்சம் சுமாராக உள்ளது என்பார். ஆனால் இரவில் தூங்கி எழுந்தால் வலி முழுவதும், குறைந்து விடுகிறது என்பார். ஒரு சிலர் சொல்வார்கள். மதியம் மூன்று மணிக்கு தலைவலி, காற்றில் நடந்தாவோ, சாப்பிட்டாலோ. கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால், கொஞ்சம் சுமார் என்பார்கள். ஆனால் அப்பொழுது கூட வலி இருந்து கொண்டே தான் இருக்கிறது என்பார்கள். மண்டை மூளைக்குள் தான் தலைவலி உற்பத்தி ஆகி தலை வலிக்கிறது என்று சொல்வார்கள். இரண்டு பொறியிலும், துப்பாக்கியில் சுடுகிற மாதிரி அவ்வளவு வலி என்பார்கள். ஒரு சிலர் காலை பதினொரு (11) மணி வரைக்கும் கூட வலிக்கிறது என்பார். மற்றும் சிலர் மூன்று மணி வரைக்கும் கூட வலிக்கிறது என்பார். அதிகமான திறந்த வெளிக் காற்றில் போனாலும் கூட வலி என்பார்கள். காற்று இல்லாத இடத்துக்கு போனாலும் அதிக வலி என்பார். மண்டைக்குள் கடுமையான வலி இருக்கிறது என்பார். மண்டையை தேய்த்து விட்டால் சுகம் என்பார். காலை பதினொரு மணி முதல் மாலை ஏழு மணி வரை ஒரே மாதிரியாகவே வலிக்கின்றது என்பார்கள்;. அதிகாலையில் 3 லிருந்து 6 வரை மந்தமாக இருக்கிறது என்பார். கண்ணுக்கு சிறிது வேலை கொடுத்தாலும் கண் வேக்காடு என்பார். இப்படி கண்களையும், மூக்கையும், தலைவலியைப் பற்றியுமே கூறுவார்கள். மற்றும் வாய், மார்பு, வயிறு, மலக்குடல், கை, கால்கள், நரம்பு, நுரையீரல், முதுகு, காய்ச்சல் என்று பல பகுதிகள் விரிவாக உள்ளன. அதை ALLEN KEY NOTES –– ல் இன்னும் விளக்கம் வேண்டும் என்றால் 309ம் பக்கம் பார்த்து கொள்ளவும்.