ABSINTHIUM அபிஸிந்தியம்

மூலம்: ஐரோப்பாவில் விளையக்கூடிய விஷ செடியின் கொழுந்து இலையும், மலரும் சேர்ந்து அரைத்த சாறு.

காக்கை வலிப்புக்கு முக்கிய மருந்து. நினைப்பு தெரிந்தால் CAUST., நினைவு தெரியலை என்றால் ABSI., வலிப்புக்கு முன் கொலை வெறி BELL, CUPR, CICUTA. இது மூன்றும் வேலை செய்யாத போது ABSI. மெனோபாஸ் சீக்கிரம் வந்திடும். கணவன் மீது வெறுப்பு SEP. மனைவி மீது வெறுப்பு ACID-FL.,குழந்தை மீது வெறுப்பு ABSI.,குறிப்பிட்டவர் மீது வெறுப்பு N-C., காரணமே இல்லாமல் மனைவி மீது வெறுப்பு ANAC, ABROT, ABSI., மூன்றுமே பொருந்தும். உயரமாக தலையை தூக்கி பிடித்து தணிந்தால் N-M., அதிகமானால் ABSI.இரக்கமின்றி கொலை செய்வான். ஒழுக்கம் குறைவு. பெரியவர்களையும் பெயர் சொல்லி கூப்பிடுவான். காரணமின்றி வெறுப்பு. அம்மா மீது வெறுப்பு THUJA. காய்ச்சலில் மயங்கி பின் பக்கம் சாய்வார். தலை கீழே சாய்ந்து பிடித்தால் தணிவு. தலையணை வைத்தால் அதிகமாகும். வலிப்புக்கு முன் நடுக்கம். பயங்கரமான ஷேஷ்டை செய்தல், முட்டாள் மாதிரி;, பயங்கரமாக பார்த்தல், மாயமாக காதில் ஏதோ ஓசை கேட்டல், மாயமாக ஏதோ தெரிதல், பிறகு எதுவும் இல்லை என்று கூறுவார். டக்குனு ஞாபகம் போய்விடும்.

தலை

பெண் கூறுவாள், தலையே மேல் புறமாக ஏறி முதுகு பக்கம் போகிற மாதிரி ஒரு குழப்பம் என்பாள். மூளை, தண்டுவடம், ஆகியவற்றில் ஒரு வேக்காடு.

கண்

விழி கணமாகி நமச்சல் ஏற்படும். பார்வை நரம்புகளில் ஊசியில் குத்துவது போல வலி.

காது

ஒலி நரம்புகளில் மந்தம்.

முகம்

வலிப்பின் போது முகம் பனிமுட்டம் மாதிரி அதிக இரத்தம் முகத்தில் பாய்ந்தது போல சிவந்து இருக்கும். இது காக்கை வலிப்பின் போது தோன்றும் முக்கிய குறியாகும்.

வாய்

காக்கை வலிப்பின் போது தாடை விரைப்பாக (இருக்கி பிடித்தது போல) இருக்கும். அப்போது நாக்கை கடித்து கொள்வார். நாக்கு தடித்து விடும். நாக்கு வெளியே பிதுங்கி பேசவே முடியாது. நாம் பார்த்தால் தொண்டை கொதி நீரில் வெந்தது போல இருக்கும்.

வயிறு

பசியே இருக்காது, உணவு மீது விருப்பம் இல்லாமல் போய் விடும். சிறிது சாப்பிட்டாலும், வயிறு உப்பி, குளிர்ந்து, தொங்கி நீண்டு விடும். ஏப்பமும், குமட்டலும் மற்றும் வாந்தியும் ஏற்படும்;. கல்லீரல் பகுதியை தொட்டு காட்டி ஏதோ உறுத்துவது போலவும், ஏதோ இருப்பது போலவும் கூறுவார்.

அடிவயிறு

கல்லீரல் பெருத்து விட்டது என்பார். மண்ணீரலில் வலி, மலேரியாவுக்கு பிறகு தான் இந்த தொல்லை என்று கூறுவார்கள். வயிறு உப்பிசம் ஏற்பட்டு காற்று பிரியவில்லை என்பார்கள்.

சிறுநீரகம்

சிறுநீர் குதிரை மூத்திரம் மாதிரி கொழ, கொழன்னும் கடுமையான நாற்றத்துடன், அதிக நேரம் சிறுநீர் கழிந்து கொண்டே இருப்பார்.

பெண்உறுப்பு

வலது சின்னைப்பையில் வலி. மந்தமான நிறத்தில் மாதவிலக்கும், காலத்துக்கு முன்னதாகவே போக்கும் ஏற்படும். மெனோபாஸ் சீக்கிரம் வந்து விடும்.

நுரையீரல்

ஈரல் பற்றிய புகார்களையே கூறுவார்கள். உடன் இரும்பல். இதயம் சம்பந்தமான தொல்லைகளும் இருக்கும்.

பொதுக்குறிகள்

பாதம் சில்லிட்டு விடும். காக்கை வலிப்பில் விழுந்தே கிடப்பார். நினைவே சிறிதும் இருக்காது. பல்லை அரைத்தல், வலிப்பில் குதிரையாட்டம் காலை உதைப்பார். பக்கவாதம் மாதிரி இழுக்கும்.

ACID – MURIATICUM - ஆசிட் முரியாட்டிக்கம்

மூரியாடிக் ஆசிட்டின் கலவை.

மிக மிக அதிகமான மந்தம். களைப்பு, கை, கால் அப்படியே இருக்கும். தாடை தொங்கிக் கொண்டு வாயை கூட மூடாமல் அப்படியே கிடப்பான். கை, கால் கீழே இறங்குவதும், சறுக்குவதும் கூடத் தெரியாது. அவ்வளவு களைப்பு. எச்சில் கூட கூட்டி முழுங்க முடியாது. அவ்வளவு பலஹீனம். பலஹீனத்துக்கு பெரிய மருந்து இது தான். டைபாய்டு, மூளைக்காய்ச்சல் போன்ற பெரிய நோய்களிலும், கவலை, பயம், ஏமாற்றம் அடைந்த பின்பு இது போன்ற நோய்களுக்கு பிறகு ஏற்படும் மரண களைப்புக்கு இதுவே மருந்து. இந்த நிலையில் இருந்தால் இது பொருந்தும். மெட்டீரியா மெடிகாவிலேயே பெரிய மரண களைப்புக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் நோயாளியைப் பார்க்கும் போது மிக, மிக சோர்வாக பேசுகிறாரா? பார்க்கிறாரா? படுத்து இருக்கும் தோற்றம் அப்படியா இருக்கிறது என்று நாம் கவனித்தாலே மருந்து ஞாபகம் வந்து விடும். கண்ணில் அதிகமான பிப்பும், உறுத்துவது போன்ற வலியும். திரும்பினால் துப்பாக்கில் சுட்டது போல வலியும் ஏற்படும்.

கண்

வீங்கி சிவந்து இருக்கும். காதில் அழுத்தற மாதிரி, இழுக்கற மாதிரி வலியுடன் கொப்புளம் இருக்கும். காதில் ஏதோ சப்தம் கேட்கும்.

மூக்கு

புண் ஏற்பட்டு அதில் தேள் கொட்டுவது போன்ற வலி ஏற்படும். மூக்கடைப்புடன் சளி ஒழுகும். கெட்டியான மஞ்சள் நிற சளி. மூக்கில் இரத்தம் வருதல். தும்பும் போது மூக்கில் கிச்சு, கிச்சு செய்வது போல இருக்கும்.

முகம்

சிவந்து இருக்கும். கன்னம் சூடாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தாகம் இருக்காது. முகப்பரு அதிகமாக ஏற்படும். இவைகள் வெய்யில் காலத்தில் ஏற்படும்.

தலை

உச்சியில் கொப்புளம் ஏற்படும். உதடு வீங்கி பெருத்து தோல் உறிந்து காணப்படும். அதில் தாங்க முடியாத அளவு வலி ஏற்பட்டு இரணம் மாதிரி இருக்கும். பற்கள் உறுத்துவது போல இருக்கும். ஈறு வீங்கி இரத்தம் வடியும்.

வாய்

வறண்டு இருக்கும். நாக்கிலும் பக்கவாதம் வந்து எச்சில் ஒழுகும். நாக்கு தூக்க முடியாது. அதனால் பேச்சு வராது. நாக்கில் தோல் உறிந்து காணப்படும். நாக்கில் வெள்ளை வட்டம் காணப்படும். தொண்டை வறண்டு இரணமாகி இருக்கும். வெள்ளை வெள்ளையாக தோல் உறியும். நெஞ்செல்லாம் சளி அப்பியிருக்கும். சிறு நாக்கும், டான்சிலும் வீங்கி விடும். ஏரளமான எச்சில் ஒழுகும்.

பசியில்;

நாக்கில் ஊசி போன மாதிரி சுவை தெரியும். மற்றும் அழுகி போன முட்டை போலவும், காரமாகவும் சுவை தெரியும். பித்த கசப்பும், இனிப்பும,; பீர் குடித்த மாதிரி தெரியும். அதிகமாக தாகம் இருக்கும். கறி சாப்பிட்ட பிறகு இப்படி எல்லாம் வந்து விட்டது என்பார். விக்கலும், வாந்தியும் வரும். வெறும் வயிற்றில் கூட பித்த வாந்தி வரும். சாப்பிட்ட பின்பும் பித்த வாந்தி வரும்.

சிறுநீரகம்

சிறுநீர் பையின் பலஹீனத்தால் அடிக்கடி சிறுநீர் வரும். சீறுநீர் வரும் போது உயிர் போற மாதிரி வலி. தானாகவே சிறுநீர் சொட்டு சொட்டாக ஒழுகும். ஆண் உறுப்பு் மானித் திண்டில் உப்பி ரணம் ஆகி தோல் உறியும். விதை பகுதி கடுமையான பிப்பு ஏற்படும் அப்போது உணர்வுகளை அடக்கினாலோ, சொறிந்தாலோ சரியாகி விடும். ஆசை இருக்கும் ஆனால், ஈடுபட முடியாது. உறுப்பு தளர்ந்து இருக்கும்.

பெண் உறுப்பு

பெண் உறுப்பை தேய்த்து, தேய்த்து கீழே இறங்கின மாதிரி இருக்கும். இவர்கள் இப்படி தேய்பதியிலேயே பைத்தியம் ஆகிவிடுவார்கள். மாத விலக்கின் போது இந்த இடம் புண்ணாகி விடும். சீழ் பிடித்தது போல் நிறைய தண்ணி ஒழுகும். அதனால் உறுப்பு பலஹீனம் ஆகி துணிக்கூட பட முடியாது மற்றும் உட்கார முடியாது.

நுரையீரல்

மூச்சி இழுத்து, இழுத்து அந்த இடம் இரணம் ஆகி குதிரை இழுக்கும் மூச்சு மாதிரி சப்தம் கேட்கும். இரும்பி, இரும்பி சளியை சோப்பு நுரையாட்டம் கக்குவார்கள். மேலும் கீழும் மூச்சு வாங்கும். அப்பொழுது ஈட்டில் குத்துவது போலயிருக்கும். மூச்சு இழுப்பதை பார்த்தால் பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்து மார்பு இழுத்து கட்டியது போல இருக்கும். மூச்சு இழுக்கும் போது பயங்கரமான வலி ஏற்படும். நெஞ்சு எலும்புக்குள்ளே ஏதோ வைத்து அழுத்துகிற மாதிரி மந்தமான ஓர் உணர்வு இருக்கும்.

இதயம் மற்றும் துடிப்பு

இதயத்தையும் நெஞ்சி எலும்பையும் வைத்து தைத்த மாதிரியிருக்கும். இது எப்போது என்றால் ஒரு பேச்சி பேசினாலும், ஆழ்ந்து மூச்சி இழுத்து விட்டாலும், சிறிது அசைந்தாலும், பயங்கரமாகயிருக்கும், அவருக்கு துடிப்பானது சப்தம் மொதுவாக கேட்க்;கும். ஆனால் அடிக்கடி துடிக்கும். குட்டை, குட்டையான சின்ன துடிப்பு, அப்போது இருதய பகுதி முழுவதையும் துப்பாக்கியில் வைத்து சுடுகிற மாதிரியிருக்கும். இரவு நேரத்தில் கரண்டு சேக் அடிக்கிற மாதிரி இருதயம் அடிக்கிறது என்பார். இப்படி இருதயத்தை பற்றிய பயங்கரத்தையே கூறுவார். இப்படி அவருடைய முகத்தை பார்க்கும் பொழுது வெளிப்படையாக தெரியும். முதுகு;- சுறுக்கு, சுறுக்குனு முதுகு வலிக்கும். வில்லாட்டம் உடம்பை இரண்டாக வளைப்பார்கள். இப்படி உடம்பை அப்படியே வருத்திக் கொண்டு இருப்பார்கள். துப்பாக்கியில் சுடுவது போல வலியிருக்கும் அப்போது தோள்பட்டையை கொண்டு குனிந்து, சிறுநீர் பையை அழுத்தி பிடிப்பார். அவ்வளவு கொடுமையாக இருக்கும்.

கை பற்றி

பலஹீனத்தால் பக்கவாதம் தோள்பட்டையை வைத்து முறுக்கிற மாதிரியும் வலி. விசேஷமாக கை விரல்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் கிழிக்கிற மாதிரி வலி என்பார். கைகளிலும், விரல்களிலும், உள்ளங்கையிலும் கிச்சு, கிச்சு செய்கிற மாதிரி உணர்வும், பிப்பும், ஈட்டியில் குத்துகிற மாதிரி இருக்கிறது என்பார். கைகளின் பின்பக்கமும். விரல்களின் பின் பக்கமும், சொரிந்த பின்பு செதில்களாக உதிரும். எழுத்து வேலை செய்த பிறகு பெரு விரல் சுளுக்கிவிட்டது என்பார். இப்படி சொரிந்த பிறகும், வேலை செய்த பிறகும், எரிச்சலோடு உள்ளங்கையும், விரல்களும் வீங்கியிருக்கும், அப்போது கையைப் பார்த்தால் சவத்தின் (இறந்தவர்களின்) கை போல இருக்கும்.

கால்கள் பற்றி

தொடைக்குள்ளே சுளுக்கு விழுந்து இழுக்கிற மாதிரியிருக்கும். தொடை இரண்டையும் இருக்கி பிடித்த மாதிரி இருக்கும். ஆனாலும் பலஹீனம் மாதிரியிருக்கும். தொடையில் வட்ட, வட்டமாக பிப்பு எடுக்கும். சொரிந்தால் சுகமாக இருக்கும். பிறகு வீங்கி விடும். கெண்டைக் காலும், குதிகால் நரம்பும் நடக்கும் போது இழுத்து பிடித்த மாதிரியிருக்கும். குதிங்கால் நரம்பு இரவிலும், பகலிலும், நடக்கும் போதும், தூங்கும் போதும், ஈட்டியில் குத்துகிற மாதிரி வலியும், சீழ் பிடித்த மாதிரி வலியும், கெண்டைக்கால்களில் குழிப்புண்களில் ஏற்படும் வலியும், அதில் எரிச்சலும் இருக்கும். பாதத்தை தொட்டுப் பார்த்தால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார்கள். கட்டை விரல் மட்டும் எரியுது என்பார்கள். அப்போது வீக்கத்தோடு அந்த பகுதி சிவந்து காணப்படும்.

குறிபபு்

பொதுவாக இந்த மருந்து மனதாலும், உடலாலும், பல விதமான அடி தடிகளுக்கு பிறகும், உள்புறமோ, வெளி புறமோ, பல வித விஷ தாக்குதலுக்கு பிறகும், டைபாயிடு, மலேரியா, மூளைக்காய்ச்சல், போன்ற பல விதமான கடுமையான நோய்களுக்கு பிறகும், புற்று நோய், எய்ட்ஸ் போன்ற பலவித பயங்கரமான நோய்களுக்கும், மரண களைப்புக்கு பிறகும் ஏற்படும் களைப்புக்கும் ஒரே மருந்து இது தான்.

ACID – NITRICUM –ஆசிட் நைட்ரிக்கம்

தங்கத்தையே கரைக்கும் குணமுள்ள இராஜ திராவகத்தின் கலவை.

தொண்டையில் குச்சி, சிதாம்பு குத்தியது போல் எண்ணம் இருககும். தனக்கு கீழ், மேல் உள்ளவர் தப்பு சொல்லி (செய்து) விட்டால், அவரை மன்னிக்க மாட்டார்கள்;. நீங்கள் மருந்து கொடுத்த பின்பு எல்லா தொல்லையும் அதிகமாகி விட்டது. என்று குற்றம் சாட்டுபவர் உடன் OPIUM, ACID – NIT. (தொண்டையில் சிதாம்பே குத்தி விட்டால் HEP.)வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். ஆனால் இவர்கள் சவாரி செய்தால் சுகம்.

காது

செவிடுக்கு கூட காது கேட்கும். சிறுநீர் போனால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார். பூந்தசைகளில் காளிபிளவர் போன்று மரு இருக்கும். தொட்டால் தானாகவே இரத்தம் வரும். பொருள்கள் மாயமாக சிறுத்தும், பெருத்தும் காணப்படும். வாய், நாக்கு, யோனி இங்கெல்லாம் கத்தியில் அறுத்த மாதிரி புண் இருக்கும். மாமிசம், ரொட்டி சாப்பிட பிடிக்காது. உப்பும், கொழுப்பும் ஒரே நேரத்தில் சாப்பிட விருப்பம். உடன் ACID – NIT, SULPH ஆகியிருக்கிறது. சிதாம்பு குத்திக்கொண்டு இருக்கிற மாதிரி இருக்கிறது என்றால்; ARG-N, HEP, ACID-NIT. அதிக காரம், சாம்பல், பென்சில், சிலேட்டு, மண், உப்பு, நெய், எண்ணெய், கொழுப்பு, மண், சாக்பீஸ், இப்படி ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட விருப்பம். ஆனால் ஆனால் அதை சாப்பிட்டால் பேதியாகும். மிகச் சிறிய வண்டி சப்தம் கூட தாங்க மாட்டார். சிபிலிஸ் நோயில், மருவில் கை பட்டதும் இரத்தம் வடியும் THUJA. சரியான மருந்து கொடுத்து அது புரூவிங் ஆனால் இதை கொடுத்து பின்பு உரிய மருந்து கொடுத்தால் வேலை செய்யும். சரியாகும். குளிர்ச்சிக்கு பிறகு சளி பிடித்து கொண்டது, சளி கெட்ட நாற்றம் வீசுகிறது என்றால் இது. பாதத்தில் பித்த வெடிப்பு, கத்தியில் அறுத்த மாதிரி இருந்தால், இரத்தம் வடிந்தாலும் இது தான் மருந்து. உடன் கோபமும், இந்த வியாதியில் இறந்து விடுவேன் என்ற பயமும், இந்த பழைய நோயில் இருந்து தப்பித்து விட்டேன் என்ற பேச்சும் இருக்கும். யாரையும் மன்னிக்காத மனம். சிறிய விசயத்துக்கு கூட மன்னிக்க மாட்டார். மனம் சமாதானமே அடையாது. யோனி, மானி, ஆசன வாய் போன்ற இடங்களில் சைகோஸிஸ் (கட்டிகள்) தோன்றும் போது, முதலில் நீர் மாதிரி பின்பு திரவம், பச்சை நிற இரத்தம், மஞ்சள் நிறம், இப்படி கழிவுகள் வடிந்து பின்பு கள்ள சதை வளர்ச்சி காளிபிளவர் மாதிரி மிருதுவாக தோன்றும். குதிரை மூத்திரம் மாதிரி நிறத்துடனும், நாற்றமாகவும், காரமாகவும் எரிச்சலோடும் போகும். எலிப் பொறியில் சிக்கிக் கொண்டு இருப்பது போல் எண்ணம் இருக்கும்.

ACID – PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிக்கம்

பாஸ்பரத்தின் கார திராவகம்.

சக்தி இழந்து விடுதல், காம உணர்வு அதிகம். அதனால் விந்து சக்தி குறைவு, நீண்ட நாட்களாக காம எண்ணத்தால் ஏமாற்றம். காதல் தோல்வி, அதைப் பற்றி மறக்க முடியாமல் ஏக்கம். வேகமாக வளரும் முட்டாள், சிறுவர்கள் பால் கலந்த இரத்தம் மாதிரி சிறுநீர் போவார்கள். கால் நடுக்கம், மந்தம், அதிகமாக தூங்குதல், சூடான பானம் குடித்தல் தலைவலி விட்டுபோகும். SATROP, ARS, PULS, N-M, ING, K-BRO பார்த்துக்கொள்ளனும். கண்ணை சுற்றிலும் நீல நிறமாக வியாதி பிடித்த மாதிரி இருப்பார். (கண் உருண்டை மட்டும் அழகாகவும், நீல நிறமாகவும் இருந்தால்; PULS.) கேட்ட கேள்விக்கு மிகவும் மந்தமாக யோசித்து பதில் சொல்லும் முட்டாள் சிறுவர்கள். பின் மண்டை, நெற்றி ஆகியவற்றுக்கு ஒரு பட்டி போட்ட மாதிரி இருக்கிறது என்றும், மிக சிறிய அசைவும், மிக சிறிய சப்தமும், குறிப்பாக இசையும் கேட்டால் வலி அதிகமாகிவிடுகிறது என்பார். நீண்ட நாட்களாக காதல் தோல்வி, ஏக்கம், ஏமாற்றம் இருக்கும். (இதே மாதிரி இசையிலும், அசைவிலும் சுகம் என்றால் BRY, GELS, SIL.) கண்களை அதிகமாக பயன்படுத்திய பிறகு தோன்றும் தலைவலி பள்ளி மாணவிகளுக்கு தோன்றும் தலைவலிக்கு இது முக்கிய மருந்து. கிழிக்கிற மாதிரி, அறுக்கிற மாதிரி, வெட்டுகிற மாதிரி இருக்குது என்பார். இவர்களுக்கு தோன்றும் பேதியானது தண்ணியாட்டம் வலியில்லாமல் மஞ்சள் நிறத்தில் போகும். ஆனால் அப்போது தானாகவே காற்று காரமாக பிரியும். பலஹீனத்தினால் நமக்கு காலரா இருக்குமா என்று பயம் தோன்றும். பெண் செக்ஸ்க்காக பிறப்பு உறுப்பை தேய்த்து, தேய்த்து உறுப்பும், மனமும் பலஹீனம் அடைந்து, ஏக்கம் அடைந்து, பின்பு உண்மையான உடலுறவுக்கு தகுதி அற்று போய்விடுவாள். உடன் UST.மார்பு பலஹீனத்தால் மெலிந்து, சிறுத்து உயிர்சக்தி குறைந்து காச நோயாகி முட்டாள் ஆகிவிடுவார்கள்.

ACONITE – NAPE – அக்கோநைட் நேப்

மத்திய ஆசியாவில் விளையக்கூடிய கருடகிழங்கு.

மரண பயத்திற்கு முக்கிய மருந்து இது. சிறுநீர் போனால் வலி. அதனால் பயம். வலியின் போதும், பேதியின் போதும், மற்ற நோயின் போதும், வேகமான நோயின் போதும் மரண பயம், மரண பயத்திற்க்கு காரணம் சொன்னால் ACON. குறிப்பிட்ட நேரத்தைக் கூறி எனக்கு நேரம் நெருங்கி விட்டது. நான் செத்து விடுவேன் என்று பயத்துடன் கூறினாலும், எண்ணெய் கவிச்சை மாதிரி சிறுநீர் இரவு இரண்டு (2) மணி அளவில் வரும், காய்ச்சலின் போது பச்சத் தண்ணீர் சொம்பு, சொம்பாக சாப்பிடுவார். மற்ற நேரம் இப்படி சாப்பிட்டால் BRY, SULPH, VERAT.. தொண்டை ஈரம்பட்டால் போதும் என்பார்; ARS. குளிர் நீர் நிறைய குடித்தால் PHOS.வேகம், தாகம், தவிர்ப்பு, மரண பயம், ரோட்டில் போகும் போதும், சாவு வீட்டுக்கு போகும் போதும், சவத்தை (இறந்தவர்களை) பார்க்கும் போதும், விபத்தை பார்க்கும் போதும், ரோட்டை தாண்டும் போதும், ஊசி போடும் போதும், ஊசி போட்ட பிறகும், பக்க வாதம், எய்ட்ஸ், புற்று நோய், ப்ரஸ்சர், வலிப்பு நோய், போன்ற எந்த நிலையாக இருந்தாலும், அதில் வேகமும் மற்றும் மரண பயம் இருந்தால் முதல் மற்றும் முழுமையான மருந்து இதுவே. அப்போது இதை கொடுத்தால் சில வினாடிகளில் நோய் பரந்து ஓடி விடும். மரணத்தைப் பற்றி பேசினாலும், தன் உடம்பு டக்குனு கெட்டு போச்சி என்று நினைத்தாலும், கூறினாலும், டாக்டரியிடம் வந்து எய்ட்ஸ் நோயாக இருந்தாலும் கூட, உடனே இதை துரத்தி விடுங்க என்று பணிவாக பேசினாலும், மருந்து சாப்பிட்டால் உடனே நன்றாகி விடும் என்று நம்பினாலும் இது தான் மருந்து. காய்ச்சலின் போது பச்சத் தண்ணீரை குடம் குடமாக குடிக்க வேண்டும் என்பார். அப்போது தண்ணீரை தவிர மற்ற எந்த ஒரு பொருளும் வேண்டாம் கசக்குது என்பார்.

AESCULUS – HIPPOCASTANUM - அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்

பெண் குதிரையின் மார்பு காம்பு.

ஆசனவாயில் (மூலத்தில்) ஊசி, சிதாம்பு, கத்தி குத்தி இரணம் மாதிரி நரம்பு தடித்து விடும். பல வித வலி அதனால் குனிய நிமிர கஷ்டம். மற்ற பூந்தசைகளிலும் காணலாம். நெற்றி, கழுத்து, போன்ற இடங்களிலும் துடிப்பு LAC-C, PULS. காலையில் குழப்பமும், ஒருமைபடுத்த முடியாத மனநிலையும், வலியில் தப்பித்துக் கொள்ள விருப்பம், ஆசன வாயில் நமச்சல், கணம், வறட்சி, வலி, எரிச்சல், இரணம், அதனால் மன குழப்பம், ஆஸனம் தனியாகி பம்பரம் மாதிரி கணம் என்பார்கள். ஒரு குடத்திலிருந்து இன்னொரு குடத்திற்கு தண்ணீர் மாற்றுகிற மாதிரி சப்தம் வயிற்றில் கேட்கும். ஆஸ்துமாவுடன் பேதி ACID NIT. அரிசி கழுவின மாதிரி பேதி VERAT.நுரையீரல், கல்லீரல், மூக்கு உள்பகுதி, வயிறு, யோனி, மானி, ஆஸனவாய் போன்ற மென்மையான பகுதியில் குச்சியில் குத்துகிற மாதிரி குத்துது என்பார்கள். ஆஸன வாய் தடித்து போச்சி என்பார்கள். தனிமையில் இருக்கும் போது குழப்பமாகவும், ஏதோ பரி கொடுத்த மாதிரியும், தொலைத்த மாதிரியும் இருக்குது என்பார். கோபம், கவலை, வருத்தம் வந்து விட்டால், கடுமையான குழப்பம் ஆகிவிடும். அப்போது நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை என்பார். உடன் COFF, MEZ, AESC. அதாவது மறுத்து போன மாதிரி, வீங்கின மாதிரி, வறண்ட மாதிரி, சுறு, சுறுன்னு ஓடற மாதிரி பூந்தசைகளில் இப்படி வலிக்குது என்பார். வெட்டிய உறுப்பில் வலி ALLIUM CEPA.